திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜல் ஜீவன் மிஷன் இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து கோவாவில் நாளை ஆய்வு செய்கிறார் மத்திய இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் - மூன்று நாள் கோவா பயணத்தின் போது பிரதமரின் விஸ்வகர்மா மையங்களையும் திறந்து வைக்கிறார்

Posted On: 03 JAN 2024 6:55PM by PIB Chennai

மத்திய திறன் மேம்பாடு, தொழில் முனைவோர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் நாளை (04.01.2024) தொடங்கி ஜனவரி 6-ம் தேதி வரை மூன்று நாள் பயணமாக கோவா செல்கிறார். கோவாவின் பல்வேறு இடங்களில் ஜல் ஜீவன் இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து அவர் ஆய்வு மேற்கொள்கிறார்.

நாளை (04.01.2024) காலை 11:15 மணிக்கு, மர்கோவாவில் உள்ள ரவீந்திர பவனில் "திறமையான பாரதம், வளர்ச்சியடைந்த பாரதம்" என்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்கிறார். இந்த நிகழ்வின் போது, அவர் பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார். மேலும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்துடன் தொடர்புடைய திட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் கோவா மாநில முதலமைச்சர்  திரு பிரமோத் சாவந்தும் கலந்து கொள்கிறார்.

மாநிலத்தில் உள்ள இளைஞர்களின் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் வகையில், பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சிகளும் அமைச்சர் முன்னிலையில்  நடைபெறவுள்ளன.

2024 ஜனவரி 5 மற்றும் 6 ஆம் தேதிகளில், அமைச்சர் சங்கெம், கர்கோரெம் மற்றும் தபோலிம் ஆகிய இடங்களுக்குச் செல்கிறார். அங்கு மக்கள், இளைஞர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாட உள்ளார்.

-----

(Release ID: 1992872)

ANU/SM/PLM/KPG/KRS


(Release ID: 1992890) Visitor Counter : 99


Read this release in: English , Urdu , Hindi