பாதுகாப்பு அமைச்சகம்

வைஸ் அட்மிரல் கிரண் தேஷ்முக், ஏ.வி.எஸ்.எம், வி.எஸ்.எம். தளவாடப் பொருட்களுக்கான தலைவராக பொறுப்பேற்றார்

Posted On: 01 JAN 2024 1:32PM by PIB Chennai

வைஸ் அட்மிரல் கிரண் தேஷ்முக்வி.எஸ்.எம்., .வி.எஸ்.எம்.,  2024, ஜனவரி 1-ம் தேதி தளவாடப் பொருட்களுக்கான தலைவராக பொறுப்பேற்றார்மும்பை பல்கலைக்கழகத்தின் வி.ஜே.டி..யின் முன்னாள் மாணவரான வி.டி.எம் தேஷ்முக் மார்ச் 31, 86 அன்று இந்திய கடற்படையில் பொறியாளர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர்வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்கடற்படைத் தலைமையகத்தில் உள்ள பணியாளர்கள் பிரிவுசோதனை முகமைகள், தளவாடப் பொருட்கள் பிரிவுகடற்படை கப்பல் கட்டும் தளம் மற்றும் தலைமையகத்தின் கட்டளை ஆகியவற்றில் கொடி அதிகாரி மற்றும் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்ராஜ்புத் கிளாஸ்டெல்லி கிளாஸ் மற்றும் டெக் கிளாஸ் ஆகியவற்றின் முன்னணி கப்பல்களில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

ஒரு கொடி அதிகாரியாக அவர் கடற்படை தலைமையகத்தில் தளவாடப் பொருட்கள் (கப்பல்துறை மற்றும் மறுசீரமைப்புஉதவித் தலைவராகவும்தலைமை பணியாளர் அதிகாரி (தொழில்நுட்பம்) / தலைமையகம்விசாகப்பட்டினத்தில் கடற்படை கப்பல் கட்டும் தளத்தின் அட்மிரல் கண்காணிப்பாளர்விசாகப்பட்டினத்தில் கடற்படை திட்டங்களின் இயக்குநர் ஜெனரல் மற்றும் கடற்படை தலைமையகத்தில் போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் கையகப்படுத்தல் கட்டுப்பாட்டாளராகவும் பணியாற்றியுள்ளார்அவர் பதவி வகித்த காலத்தில்தான் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பல் தொடங்கப்பட்டது. மேலும்பல முன்னணி போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுவுதல்ஏவுதல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றையும் அவரது பதவிக்காலத்தில் மேற்கொண்டார். அவரது சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில்அட்மிரலுக்கு விசிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் அதி விசிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

----

(Release ID: 1992057)

ANU/SM/BS/KPG/KRS



(Release ID: 1992226) Visitor Counter : 60