நிதி அமைச்சகம்

சுங்கத் தரகர்கள் உரிமத் தேர்வு, 2023, 19.03.2024 அன்று நடைபெற உள்ளது

Posted On: 01 JAN 2024 5:19PM by PIB Chennai

சுங்கத் தரகர்கள் உரிமத் தேர்வு, 2023, 19.03.2024 அன்று நடைபெற உள்ளதுசுங்கத் தரகர் உரிமத் தேர்வு, 2024-க்கான  எழுத்துத் தேர்வு தொடர்பாக 23.08.2023  அன்று தேசிய நாளிதழ்களில் வெளியிடப்பட்ட விளம்பரத்தைப் பார்க்கவும்எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளின் முறை பின்வருமாறு:

எழுத்துத் தேர்வு மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் கொண்ட கணினி அடிப்படையிலான தேர்வாக இருக்கும்ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இருமொழிகளில் கேள்விகள் கேட்கப்படும்தேர்வர்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் பதில் அளிக்கலாம்.

மற்ற விவரங்கள் பின்வருமாறு:

கேள்விகளின் எண்ணிக்கை: 150

நேரம்இரண்டரை மணி நேரம் (10:30 மணி முதல் 13:00 மணி வரை)

மதிப்பெண் முறை : ஒவ்வொரு சரியான விடைக்கும் +3

ஒவ்வொரு தவறான பதிலுக்கும்     -1               

அதிகபட்ச மதிப்பெண்கள்       :   450

தகுதி மதிப்பெண்கள்           :   270 (60%)

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் திருத்தப்பட்ட சுங்கத் தரகர்கள் உரிம ஒழுங்குமுறைகள், 2018 இன் ஒழுங்குமுறை 6 இன் படி நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான தேர்ச்சி விகிதம் 60% ஆக இருக்கும்.

 

மேலும் விவரங்களுக்கு இணையதளங்களைப் பார்வையிடவும் (www.cbic.gov.inமற்றும்www.nacin.gov.inஅல்லது அருகிலுள்ள சுங்க ஆணையரகம் / என்ஏசிஎன்ஃபரிதாபாத் @ மின்னஞ்சல் முகவரி -nacin.cblr@icegate.gov.in தொடர்பு கொள்ளவும்.

----

(Release ID: 1992139)

ANU/SM/BS/KPG/KRS

 
 
 


(Release ID: 1992203) Visitor Counter : 169


Read this release in: English , Urdu , Hindi , Marathi