கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கூட்டுறவு அமைச்சகம்: 2023ஆம் ஆண்டின் சாதனைகள்

Posted On: 31 DEC 2023 4:18PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் "ஒத்துழைப்பு மூலம் செழிப்புஎன்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க, 2021 ஜூலை 6 அன்று ஒரு தனி கூட்டுறவு அமைச்சகம் நிறுவப்பட்டதுநாட்டின் முதல் கூட்டுறவுத் துறை  அமைச்சர் திரு அமித் ஷாவின்  திறமையான வழிகாட்டுதலின் கீழ்புதிதாக உருவாக்கப்பட்ட இந்தக் கூட்டுறவு அமைச்சகம் குறுகிய காலத்தில் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த பல புதிய முயற்சிகளையும் வரலாற்று நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தகூட்டுறவு அமைச்சகம் 54 முக்கிய முன்முயற்சிகளை எடுத்துள்ளதுஇதன் மூலம் அனைத்து கூட்டுறவு சங்கங்களும் அவற்றின் பொருளாதார வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பெறுகின்றனஇந்த ஆவணத்தின் மூலம்நாட்டின் கூட்டுறவுத் துறையின் பங்குதாரர்களுக்கு பயனளிக்கும் இந்தப் புதிய முயற்சிகள் குறித்த சுருக்கமான தகவல்கள் வழங்கப்படுகின்றன.

தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களின் (பி..சி.எஸ்)பொருளாதார வலுவூட்டல்

தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களின் பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கும்போது அவை அதிக அதிகாரம் மற்றும் பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக இருக்கும் என்று கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.  எனவேஅவரது தலைமையின் கீழ்அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள்தேசியக் கூட்டமைப்புகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் கூட்டுறவு அமைச்சகத்தால் பி..சி.எஸ்ஸிற்கான மாதிரி துணை விதிகள் 2023,  ஜனவரி 5 அன்று அறிவிக்கப்பட்டனபால்வளம்மீன்வளம்சேமிப்பு போன்ற 25-க்கும் மேற்பட்ட புதிய துறைகளில் புதிய வேலை வாய்ப்புகளை இது உருவாக்கும்.

கணினி மயமாக்கல்

பி..சி.எஸ்ஸின் செயல்திறனை அதிகரிக்கபி..சி.எஸ் கணினிமயமாக்கல் தொடங்கப்பட்டுள்ளதுமொத்தம் 62,318 செயல்பாட்டு பி..சி.எஸ்கள் நபார்டு வங்கியுடன் ஒரே தேசிய மென்பொருள் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டுள்ளனஇதுவரை, 25 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களிலிருந்து மொத்தம் 62,208 பிஏசிஎஸ்களை கணினிமயமாக்குவதற்கான முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன.

இதற்காகவன்பொருள் கொள்முதல்டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஆதரவு அமைப்புகளை அமைப்பதற்காக மாநிலங்களுக்கு மொத்தம் ரூ .575.75 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளதுதேசிய ஒருங்கிணைந்த மென்பொருள் நபார்டு வங்கியால் தயாரிக்கப்பட்டுள்ளதுஇது பிஏசிஎஸ்ஸில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்றும்பிஏசிஎஸ் செயல்பாட்டில் பொதுமக்களின் நம்பிக்கையை கணிசமாக அதிகரிக்கும் என்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா நம்புகிறார்வன்பொருள் 20 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் வாங்கப்பட்டுள்ளது. 26 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 6,117 பிஏசிஎஸ்களில் சோதனை முயற்சி நடைபெற்று வருகிறதுமேலும் 988 பிஏசிஎஸ்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

ஒவ்வொரு ஊராட்சிகிராமத்திலும் பல்நோக்கு பி..சி.எஸ்பால்பண்ணைமீன்வளக் கூட்டுறவுச் சங்கங்களை நிறுவுதல்.

பிரதமர் திருநரேந்திர மோடியின் தலைமையின் கீழ்அடுத்த 5 ஆண்டுகளில்இதுவரை உள்ளடக்கப்படாத ஊராட்சிகள் / கிராமங்களில் புதிய பல்நோக்கு பிஏசிஎஸ் / பால்பண்ணை / மீன்வள கூட்டுறவு சங்கங்களை அமைக்கும் நோக்கத்துடன் இந்த திட்டத்திற்கு 2023 பிப்ரவரி 15 அன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுஇதன் கீழ்மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் தொடக்கக் கூட்டுறவு சங்கங்கள் அளவில் ஒருங்கிணைக்கப்படும்இத்திட்டத்தினை செயல்படுத்த அமைச்சகங்களுக்கு இடையேயான குழுதேசிய அளவிலான ஒருங்கிணைப்புக் குழுமாநில அளவிலான கூட்டுறவு வளர்ச்சிக் குழுக்கள் மற்றும் மாவட்ட அளவிலான கூட்டுறவு வளர்ச்சிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளனகூட்டுறவுத் துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படிஅமைச்சகம் அனைத்து மாநிலங்களுடன் கூட்டங்களை நடத்தி வருகிறதுநபார்டு வங்கிதேசிய பால்வள வாரியம் மற்றும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றால் புதிய சங்கங்கள் அமைப்பது தொடர்பான செயல்திட்டம் தயாரிக்கப்பட்டுஇத்திட்டத்தின் கீழ் 23 மாநிலங்கள்யூனியன் பிரதேசங்களில் 9,961 புதிய பல்நோக்கு பிஏசிஎஸ் / பால்பண்ணை / மீன்வள கூட்டுறவு சங்கங்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய பரவலாக்கப்பட்ட தானிய சேமிப்புத் திட்டம்

பிரதமர் திருநரேந்திர மோடி தலைமையில், 2023 மே 31 அன்றுகூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய உணவு சேமிப்புத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுஇத்திட்டத்தின் கீழ்மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பி..சி.எஸ் அளவில் ஒருங்கிணைப்பதன் மூலம் குடோன்கள்வாடகை மையங்கள்பதப்படுத்தும் அலகுகள்நியாயவிலைக் கடைகள் போன்ற பல்வேறு வகையான வேளாண் உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படும்நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும்உணவு தானியங்கள் வீணாவதைக் குறைக்கும்விவசாயிகளின் விளைபொருட்களுக்கு சிறந்த விலையை ஏற்படுத்தும் மற்றும் பல்வேறு விவசாயத் தேவைகளை பிஏசிஎஸ் மட்டத்திலேயே பூர்த்தி செய்யும் என்று அவர் நம்புவதால்கூட்டுறவு அமைச்சர் திருஅமித் ஷா இந்த திட்டத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறார்இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, 24 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 24 பி..சி.எஸ்.களில் மாநிலங்களின் ஒத்துழைப்புடன் ஒரு முன்னோடித் திட்டம் நடைபெற்று வருகிறதுஇதில் 13 மாநிலங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளனமேலும், 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1779 பிஏசிஎஸ்கள் இரண்டாம் கட்ட முன்னோடித் திட்டத்தில் பங்கேற்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளனஇத்திட்டம் அமைச்சகங்களுக்கு இடையிலான குழு (.எம்.சி), தேசிய அளவிலான ஒருங்கிணைப்புக் குழு (என்.எல்.சி.சி), மாநில அளவிலான கூட்டுறவு மேம்பாட்டுக் குழு (எஸ்.சி.டி.சிமற்றும் மாவட்ட அளவிலான கூட்டுறவு மேம்பாட்டுக் குழு (டி.சி.டி.சிஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்படுகிறது.

---

(Release ID: 1991953)

ANU/PKV/BS/KPG/KRS


(Release ID: 1992201) Visitor Counter : 296


Read this release in: English , Hindi , Malayalam