புவி அறிவியல் அமைச்சகம்

2023-ஆம் ஆண்டில் புவி அறிவியல் அமைச்சகத்தின் முக்கிய சாதனைகள்

Posted On: 28 DEC 2023 7:07PM by PIB Chennai

இந்தியாவின் முதல் ஆர்க்டிக் குளிர்காலப் பயணத்தை மத்திய புவி அறிவியல் அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு டிசம்பர் 18, 2023 அன்று தொடங்கினார்.

 2023 அக்டோபரில் அண்டார்டிகாவுக்கு பயணம் செய்த 19 உறுப்பினர்களைக் கொண்ட முதல் தொகுதியுடன் அண்டார்டிகாவுக்கான 43-வது இந்திய அறிவியல் பயணம் தொடங்கப்பட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையான வானிலை (சூறாவளி, கன மழை, வெப்ப அலை, குளிர் அலை, இடியுடன் கூடிய மழை, மூடுபனி) முன்னறிவிப்பில் 40-50% முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

வெளிப்பாடு மற்றும் பாதிப்பு அளவுருக்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட பதில் நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கி மாவட்ட மற்றும் நகர மட்டங்களில் அனைத்து கடுமையான வானிலை நிகழ்வுகளுக்கும் தாக்க அடிப்படையிலான முன்னறிவிப்பு (ஐ.பி.எஃப்) வழங்கப்படுகிறது.

லேண்ட்ஸ்டவுன், பனிஹால், முராரி தேவி, ஜோட் மற்றும் சுர்கந்தா தேவி ஆகிய இடங்களில் நான்கு டாப்ளர் வானிலை ரேடார்கள் (டி.டபிள்யூ.ஆர்) நிறுவப்பட்டன.

போர்ட் பிளேர், இம்பால், கோஹிமா, ஐஸ்வால் ஆகிய இடங்களில் நான்கு புதிய வானிலை மையங்கள் திறக்கப்பட்டன. புதிய வானிலை மையங்கள் இந்தப் பிராந்தியங்களில் வானிலை தொடர்பான சேவைகளைச் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் மாற்றும். இந்த நான்கு புதிய சேர்க்கைகளுடன், நாட்டின் மொத்த வானிலை மையங்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

நவ்காஸ்ட் நிலையங்களின் எண்ணிக்கை 1124 (2022)லிருந்து 1200 ஆகவும், நகர முன்னறிவிப்பு நிலையங்களின் எண்ணிக்கை 1181 (2022) லிருந்து 1300 ஆகவும் அதிகரித்துள்ளது.

விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் உள்ளிட்ட நமது விவசாய சமூகத்திற்குப் பயனளிக்கும் வகையில் வட்டார அளவிலான வானிலை முன்னறிவிப்புகளுக்கான எச்சரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் உள்ளிட்ட தகவல்களைப் பரப்புவதற்காக  https://www.greenalerts.in/  என்ற புதிய வலைத்தளம் வெளியிடப்பட்டது. வானிலை தொடர்பான தகவல்கள் தற்போது ஆங்கிலம், இந்தி மற்றும் ஒன்பது பிராந்திய மொழிகளில் பரப்பப்படுகின்றன. இந்த வலைத்தளம் மூலம் பரப்பப்படும் நிகழ்நேர வானிலை முன்னறிவிப்புகளை கிராம பஞ்சாயத்துகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் குறுஞ்செய்தி அல்லது  புலனம் மூலம் பகிர்ந்து கொள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துடன் ஒத்துழைக்கும். சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வானிலை தொடர்பான சேவைகள் கடைசி மைல் பயனரை திறம்படச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக  இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

2024-2027 ஆம் ஆண்டிற்கான உலக வானிலை அமைப்பு (டபிள்யூ.எம்.ஓ), ஆசியாவிற்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் மற்றும் வெப்பமண்டல சூறாவளிகளுக்கான பசிபிக் குழு ஆகியவற்றை நடத்தும் மதிப்புமிக்க வாய்ப்பை இந்தியா பெற்றது.

நடுத்தர அளவு வானிலை முன்னெச்சரிக்கைகான தேசிய மையம் (என்.சி.எம்.ஆர்.டபிள்யூ.எஃப்) 2023-ஆம் ஆண்டிற்கான இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு பயிற்சி மையமாக வெளியுறவு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

பெருங்கடல் அலை முன்னறிவிப்பு மற்றும் உலகளாவிய பெருங்கடல் முன்கணிப்பு ஆகியவற்றிற்காக இன்கோயிஸ் உலக வானிலை அமைப்பு-பிராந்திய சிறப்பு வானிலை மையங்கள் (டபிள்யூ.எம்.ஓ-ஆர்.எஸ்.எம்.சி) என நியமிக்கப்பட்டது.

இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவைகள் மையத்தின் (இன்கோயிஸ்) கடல் தொடர்பான அனைத்து சேவைகள் குறித்த விரிவான தகவல்களை வழங்க ஒரு புதிய செல்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சமுத்ரா (தரவு வளங்கள் மற்றும் கடல் ஆலோசனைகளுக்கான கடல் பயனர்களுக்கான  திறன் சார்ந்த அணுகல்) என்று பெயரிடப்பட்ட இந்தச்  செயலி,  இன்கோயிஸின் கடல் தொடர்பான சேவைகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது, இதில் சாத்தியமான மீன்பிடி மண்டல ஆலோசனைகள், கடல் நிலை முன்னறிவிப்புகள் மற்றும் சுனாமி, சூறாவளி, புயல் எழுச்சிகள், உயர் அலைகள், வீக்க எழுச்சிகள் போன்றவை பற்றிய எச்சரிக்கைகள் ஆகியவை அடங்கும். இந்தச்  செயலி சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் பயனர்களுக்கு, குறிப்பாக கடலோர சமூகங்களுக்கு நேரடியாக தகவல்களைப் பரப்ப உதவும்.

நமது இந்தியப் பெருங்கடல் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் (பிரத்யேக பொருளாதார மண்டலம்) பல்லுயிர் பெருக்கம் அடங்கிய புதிய இணையதளம்  (https://indobis.in/)பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. கொச்சியில் உள்ள கடல்வாழ் உயிரின வளங்கள் மற்றும் சூழலியல் மையம் (சி.எம்.எல்.ஆர்.இ) இந்த வலைப்பக்கத்தை உருவாக்கியுள்ளது. இந்தியப் பெருங்கடலின் கடல்வாழ் உயிரினங்களின் நிகழ்வு மற்றும் அறிவியல் வகைப்பாடு உட்பட.ஏராளமான தகவல்களை இது  வழங்குகிறது.

'ஓ.ஆர்.வி சாகர் சம்பதாவின் பயணங்களின் போது சேகரிக்கப்பட்ட இந்திய ஆழ்கடல் பிராச்சியூரான் நண்டுகளின் முறையான கணக்கு' என்ற தலைப்பில் விரிவான அறிவியல் பட்டியல் வெளியிடப்பட்டது. இது இந்திய சிறப்பு பொருளாதார மண்டலத்தில் (பிரத்யேக பொருளாதார மண்டலம்) ஆழ்கடல் நண்டு பன்முகத்தன்மை குறித்த ஆழமான தகவல்களை மாதிரி இடங்களின் படங்கள் மற்றும் வரைபடங்களுடன் வழங்குகிறது.

தேசிய கிளைடர் செயல்பாட்டு வசதி, செயல்பாட்டு கடலியல் சர்வதேச பயிற்சி மையத்தில் (ஐ.டி.சி.ஓ.ஓ), ஓஷன்சாட் -3 தரவு கையகப்படுத்தல் மற்றும் செயலாக்க வசதி மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கான கடல் வெப்ப அலை சேவை ஆகியவை பிப்ரவரி 2023 இல் தொடங்கப்பட்டன.

தூய்மை சாகர் சுரக்ஷித் சாகர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 16, 2023 அன்று நாட்டின் 8 கடலோர மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் 79 இடங்களில் குடிமக்கள் தலைமையிலான கடற்கரை தூய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டன.

நில அதிர்வு அவதானிப்பு வலையமைப்பில் 158 நிலையங்கள் உள்ளன. இந்திய பிராந்தியத்தில் சுமார் 1411 நிலநடுக்கங்கள் கண்காணிக்கப்பட்டன, அவற்றில் ~ 55 நிகழ்வுகள் (எம்>5) மற்றும் ~ 31 கடல் பூகம்பங்கள் (எம்>6) 2023 ஆம் ஆண்டில் நிகழ்ந்தன. நிகழ்வுகள் நடந்த 12 நிமிடங்களுக்குள் இந்தத் தகவல் பரப்பப்பட்டது.

***

(Release ID: 1991319)

PKV/BR/AG/KRS



(Release ID: 1992195) Visitor Counter : 81


Read this release in: English , Urdu , Hindi , Gujarati