பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திரா தேவிகா நதி புனரமைப்புத் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்
Posted On:
31 DEC 2023 7:06PM by PIB Chennai
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (31-12-2023) ஜம்மு காஷ்மீரில் தேவிகா நதி புனரமைப்புத் திட்டத்தை ஆய்வு செய்தார்.
'தூய்மை கங்கை' திட்டத்தைப் போல அதை முன்மாதிரியாகக் கொண்டு இந்த திட்டம் 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும் இது எதிர்காலத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படக் கூடும் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
ஆய்வின்போது பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், புதுப்பித்தல், புனரமைத்தல் மற்றும் அழகுபடுத்துதல் ஆகியவற்றுக்கான நீண்ட காலத் திட்டங்களை முந்தைய அரசுகள் செயல்படுத்தவில்லை என்றார். 2014-ம் ஆண்டுக்குப் பிறகுதான் வட இந்தியாவில் நதிகள் புத்துயிரூட்டும் திட்டம் முதன்முதலில் மேற்கொள்ளப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
முன்னதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய மாதாந்திர உரையான 'மன் கி பாத்' (மனதின் குரல்) உரையை செயின்ட் தாமஸ் தேவாலயத்தில் திரு ஜிதேந்திர சிங் கேட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடி மனதின் குரல் உரையில் பல முக்கியமான விஷயங்கள் குறித்து தமது கருத்துக்களைப் பகிர்ந்து வருவதாகவும், அகில இந்திய வானொலியில் தமது மாதாந்திர உரையின் மூலம் பிரதமர் மக்களை முன்னிலைப்படுத்துவதாகவும் கூறினார்.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க அனைவரும் பங்காற்ற வேண்டும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார்.
அடுத்த ஆண்டு இந்தியா நான்காவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என்று அமைச்சர் கூறினார். பிரதமர் மோடியின் 3-வது பதவிக்காலத்தில், உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் என்ற மைல்கல்லை இந்தியா எட்டும் என்று திரு ஜிதேந்திர சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
Release ID: 1991988
***
SM/PLM/KRS
(Release ID: 1992003)