தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
2022-23-ம் நிதியாண்டுக்கான ரூ. 14.20 கோடி ஈவுத்தொகையை இந்தியத் தொலைத்தொடர்பு ஆலோசனை நிறுவனம் அரசுக்கு செலுத்தியது
प्रविष्टि तिथि:
26 DEC 2023 1:16PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஆலோசனை நிறுவனம் (டி.சி.ஐ.எல்) 2022-23-ம் நிதியாண்டில் அரசுக்கு ரூ.14.20 கோடி ஈவுத்தொகையைச் செலுத்தியுள்ளது. இதற்கான ஈவுத்தொகை காசோலையை தொலைத்தொடர்புத் துறை செயலாளர் திரு நீரஜ் மிட்டலிடம் டிசிஐஎல் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான திரு சஞ்சீவ் குமார் வழங்கினார்.
டி.சி.ஐ.எல் தொடங்கப்பட்டதிலிருந்து, தொடர்ந்து லாபம் ஈட்டும் நிறுவனமாக இருந்து வருகிறது. இது 2022-23-ம் நிதியாண்டு வரை இதுவரை ரூ.294.19 கோடி ஈவுத்தொகையை அரசுக்குச் செலுத்தியுள்ளது. ஈவுத்தொகை என்பது அரசின் தொடக்க முதலீடான ரூ.0.3 கோடியின் மீது வழங்கப்படுகிறது. 2015-16-ம் நிதியாண்டில் ரூ.16 கோடி கூடுதலாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2023 மார்ச் 31, நிலவரப்படி, நிறுவனத்தின் குழு, தனி நிகர மதிப்பு முறையே ரூ .1,712.00 கோடி மற்றும் ரூ .618.56 கோடியாகும்.
2022-23-ம் நிதியாண்டில், டி.சி.ஐ.எல் முந்தைய ஆண்டை விட 25 சதவீத வருவாய் வளர்ச்சியை எட்டியது, மொத்த முழுமையான வருவாய், வரிக்குப் பிந்தைய லாபம் முறையே ரூ .2,001.7 கோடி மற்றும் ரூ.35.50 கோடி ஆகும்.
1978 ஆகஸ்ட் மாதத்தில் நிறுவப்பட்ட டி.சி.ஐ.எல் ஒரு மினி ரத்னா வகை - நிறுவனமாகும், இது தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறையின் கீழ் உள்ளது. மத்திய அரசு தனது பங்கு மூலதனத்தில் 100 சதவீதத்தை வைத்திருக்கிறது. இது இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், சிவில் கட்டுமானம் ஆகிய அனைத்து துறைகளிலும் திட்டங்களை மேற்கொள்ளும் ஒரு முக்கிய பொறியியல் மற்றும் ஆலோசனை நிறுவனமாகும். டி.சி.ஐ.எல் உலகெங்கிலும் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.
இந்நிறுவனத்தின் வெளிநாட்டு செயல்பாடுகள் குவைத், சவூதி அரேபியா, ஓமன், மொரீஷியஸ், நேபாளம் போன்றவற்றில் உள்ளன.
***
ANU/PKV/IR/AG/KPG
(रिलीज़ आईडी: 1990533)
आगंतुक पटल : 139