குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் துணைத் தலைவரின் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி

प्रविष्टि तिथि: 24 DEC 2023 5:34PM by PIB Chennai

குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜெக்தீப் தன்கர் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜெக்தீப் தன்கர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது; .

“இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் கிறிஸ்துமஸ் திருநாளில் இந்தியர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை இரக்கம், மன்னிப்பு, அன்பு மற்றும் கருணை ஆகியவற்றின் நித்திய மதிப்புகளை உள்ளடக்கியது. நமது வாழ்க்கையை வளமாக்கும், நமது பிணைப்பை வலுப்படுத்தும் இந்தக் காலத்தால் அழியாத நற்பண்புகளை நாம் எப்போதும் நினைவில் கொள்வோம்.

இந்த நாளின் மகிழ்ச்சி நமக்குள் எதிரொலித்து, அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை வளர்க்கட்டும். அனைவருக்கும் மனமார்ந்த மகிழ்ச்சியும் நல்லெண்ணமும் நிறைந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.”

*******


ANU/PKV/BS/DL


(रिलीज़ आईडी: 1990092) आगंतुक पटल : 132
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi