பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய பாதுகாப்பு அகாடமியின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் தேசிய போர் நினைவுச்சின்னத்தில் ஜே.எஸ்.டபிள்யூ-என்.டி.ஏ கார் பேரணி; சி.ஐ.எஸ்.சி லெப்டினன்ட் ஜெனரல் ஜே.பி.மேத்யூ தொடங்கி வைத்தார்

Posted On: 24 DEC 2023 2:37PM by PIB Chennai

தேசிய பாதுகாப்பு அகாடமியின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 2023 டிசம்பர் 24 அன்று புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்திலிருந்து ஜே.எஸ்.டபிள்யூ-என்.டி.ஏ-வின் டெல்லி முதல் குவாலியர் வரையிலான கார் பேரணியை ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜே.பி.மேத்யூ கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

மேஜர் ஜெனரல் இனாயத் ஹபிபுல்லா தலைமையில் 1954-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆபரேஷன் பத்லிக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தப் பேரணி தொடங்கப்பட்டது.  டேராடூனில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கும் இந்த பேரணி குவாலியர், எம்.எச்.ஓ,நாசிக், மும்பை போன்ற முக்கியமான ஆயுதப்படை நிலையங்கள் வழியாகச் சென்று, ஆறு நாட்களுக்குள் புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் தனது 1800 கி.மீ பயணத்தை நிறைவு செய்யும்.

இந்த நிகழ்ச்சியில் விமானப்படை துணைத் தளபதி ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், கடற்படை துணைத் தளபதி வைஸ் அட்மிரல் சஞ்சய் ஜே சிங்,  துணை ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தருண் குமார் ஐச், கமாண்டன்ட் என்டிஏ வைஸ் அட்மிரல் அஜய் கோச்சார் மற்றும் முப்படைகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மும்பையில் இருந்து வாகனத்தை மாற்றுவதற்கு வசதியாக மஹிந்திரா ஆட்டோ நிறுவனத்தின் ஆதரவு பேரணிக்கு அங்கீகரிக்கப்பட்டது. மேலும், தலைமையக ஐ.டி.எஸ் மற்றும் ஐ.என்.எஸ் இந்தியா ஆகியவை அவற்றின் முக்கியமான நிர்வாக மற்றும் தளவாட ஆதரவுக்கான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன.

பேரணி அதன் சவாலான பயணத்தைத் தொடங்கும்போது, தேசிய பாதுகாப்பு அகாடமியின் பாரம்பரியத்தை வரையறுக்கும் வீரம், துணிச்சல் மற்றும் தியாகங்களுக்கு இது ஒரு சான்றாக நிற்கிறது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மூத்த அதிகாரிகள், மஹிந்திரா ஆட்டோ, அமைப்பாளர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் அனைத்து பங்களிப்பாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது, சிறந்து விளங்குதல், ஒருமைப்பாடு மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் நீடித்த அர்ப்பணிப்பு ஆகியவற்றில் கூட்டு முன்னெடுப்பை வெளிப்படுத்தியது.

*******


ANU/PKV/BS/DL


(Release ID: 1990075) Visitor Counter : 91