குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

2023-ஆம் ஆண்டின் இந்திய புள்ளியியல் பணியின் (ஐ.எஸ்.எஸ்) தகுதிகாண் அதிகாரிகளுடனான குடியரசு துணைத் தலைவரின் கலந்துரையாடல் உரை

Posted On: 24 DEC 2023 1:02PM by PIB Chennai

அனைவருக்கும் வணக்கம்!

இந்திய புள்ளியியல் பணியில் இணைந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஒவ்வொரு ஆண்டும், நீங்கள் உண்மையான பெருமையைப் பெறுவீர்கள், ஏனெனில் இந்த சேவையின் தேவை அதிகரிக்கும். வலுவான மற்றும் வளமான பாரதத்தைக் கட்டமைப்பதற்கான முக்கிய கொள்கைகளின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இளம், புத்திசாலித்தனமான நிபுணர்களை சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஒரு காலத்தில் நம் பாரதம் எப்படி இருந்ததோ, அதை நீங்கள் மீண்டும் களத்தில் கற்பனை செய்து நிஜமாக்குவீர்கள். 1989-ஆம் ஆண்டில் நான் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நான் மத்திய அமைச்சகத்தில் சேர்க்கப்பட்டபோது, நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் புள்ளிவிவரங்களுடன் தொடர்புடைய அமைச்சகம் ஆகிய இரண்டு அமைச்சகங்களும் என்ன செய்கின்றன என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். அவை மிக முக்கியமான அமைச்சகங்கள் என்பதை நான் அனுபவத்துடன் கற்றுக்கொண்டேன்.

உங்கள் பங்களிப்பு இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும், சமூக மேம்பாட்டைக் கொண்டுவரும், நாம் அடைய வேண்டிய இலக்கைத் திறம்பட, தாக்கத்துடன் கொண்டு வரும்.

புள்ளியியல் என்பது எண்களைப் பற்றியது மட்டுமல்ல; இது நமது கொள்கை முடிவுகளை வழிநடத்தும் வடிவங்கள் மற்றும் போக்குகளைப் புரிந்துகொள்வதாகும். ஒரு தவறான கொள்கை, பேரழிவு விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சரியான நேரத்தில் ஒரு கொள்கையை உருவாக்கத் தவறினால், மக்கள் தோல்வியடையலாம். ஆனால் சரியான காரணத்திற்காக, சரியான நபர்களுக்கு சரியான நேரத்தில் ஒரு கொள்கை இருந்தால், முடிவுகள் பலனளிக்கும்; அவை எண் கணிதங்கள் அல்ல, வடிவியல்.

புள்ளிவிவரங்கள், சமூகத்தைப் பற்றிய நமது புரிதலை வளப்படுத்துகின்றன. ஒரு நபர் ஆரோக்கியமாகத் தோன்றலாம், ஆனால் ஆழமான நோயறிதலில் அவர் ஒரு கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவரலாம். எனவே நீங்கள் சமூக நோய்களைக் கண்டறிந்து, உண்மையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய கொள்கையை உருவாக்க அரசிற்கு உதவுகிறீர்கள்.

இந்திய புள்ளியியல் பணியின் அதிகாரிகளாக, நீங்கள் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட கொள்கை உருவாக்கத்தின் சிற்பிகளாகவும், எண்களை அர்த்தமுள்ள நுண்ணறிவுகளாக மாற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களாகவும் இருப்பீர்கள். உங்கள் வேலையைச் செய்வதில் நீங்கள் மிகவும் பகுத்தறிவு மற்றும் அறிவியல் பூர்வமானவர்கள்.

தரவுகளால் இயக்கப்படும் உலகில், உங்கள் திறன்கள் மற்றும் நிபுணத்துவம் பயனுள்ள, பதிலளிக்கக்கூடிய மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட அரசிற்கு விலைமதிப்பற்ற சொத்தாக மாறும். நாம் சீர்குலைக்கும் தொழில்நுட்பங்களின் யுகத்தில் இருக்கிறோம். செயற்கை நுண்ணறிவு, இணையம் சார்ந்த செயல்பாடுகள் பற்றிக் கேள்விப்பட்டோம், ஆனால் உங்கள் வேலைக்கு நீங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் தரவுகளை வேகமாகப் பகுப்பாய்வு செய்ய வேண்டியிருக்கும். இயந்திர கற்றல் என்பது தரவை பகுத்தறிவு கண்ணோட்டத்தில் பார்க்க உங்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு பொறிமுறையாக இருக்கலாம், மேலும் நீங்கள் அனைவரும் அந்த வேலையில் சேர நேரத்தை ஒதுக்குகிறீர்கள் என்று நான் நம்புகிறேன்.

உங்கள் பணியின் நெறிமுறைப் பரிமாணங்களை மிகைப்படுத்த முடியாது. உலகளாவிய சிறந்த ஐந்து தணிக்கை நிறுவனங்களில் ஒன்று பற்றிய ஓர் உண்மையான சம்பவத்தை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஒரு நிறுவனத்தின் இருப்புநிலை அறிக்கையில் கையொப்பமிடும்போது, அது பற்றி பங்குதாரர்கள், முறையாக நன்கு அறிந்திருக்க வேண்டும். ஆனால், முதல் ஐந்து நிறுவனங்களில் ஒன்றான அந்த உலகப் புகழ்பெற்ற நிறுவனம், பங்குதாரர்களின் நலன்களைப் புறக்கணித்து, வாடிக்கையாளரை, அதாவது பெரு நிறுவன நிர்வாகத்தை திருப்திப்படுத்தியதால் சரிந்தது. எனவே, நீங்கள் உயர்ந்த தரமான நெறிமுறைகளை வெளிப்படுத்த வேண்டும்.

புள்ளிவிவர அதிகாரிகள் என்ற முறையில், தரவுகளை உண்மையாகவும் பாரபட்சமின்றியும் முன்வைக்கும் ஒரு புனிதமான கடமை உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒருமைப்பாட்டிற்கான உங்கள் அர்ப்பணிப்பு உங்கள் தொழில்முறை நற்பெயரை வரையறுப்பது மட்டுமல்லாமல், நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களில் நம்பிக்கையை வளர்ப்பதற்கும் பங்களிக்கும். என் இளம் நண்பர்களே, ஆர்வ உணர்வையும், தொடர்ச்சியான கற்றலுக்கான அர்ப்பணிப்பையும் தொடர்ந்து வளர்த்துக் கொள்ளுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் துறையில் புதிய முறைகள், தொழில்நுட்பங்கள் மற்றும் முன்னேற்றங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். மிகவும் புதுமையான தீர்வுகள் பெரும்பாலும் மாறுபட்ட கண்ணோட்டங்களிலிருந்து வெளிப்படுகின்றன என்பதை அங்கீகரித்து, உங்கள் சகாக்கள் மற்றும் பிற நிபுணர்களுடன் ஒத்துழைக்கவும்.

அமைப்பு ரீதியான தீர்வு ஒன்றே சிறந்ததாகும். அமைப்பு ரீதியானதாக இல்லாத ஒரு புத்திசாலித்தனமான மனதிலிருந்து வெளிப்படும் தீர்வு அதிக ஆயுளைக் கொண்டிருப்பதில்லை, எனவே உங்கள் பங்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் தான் திறம்படப் பங்களிக்க முடியும்.

 

வளர்ச்சியில் ஆர்வமுள்ள, நமது இந்தியாவை 2047-ஆம் ஆண்டு வளர்ந்த நாடாகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் ஒரு பிரதமரைப் பெற்றிருப்பது நமது அதிர்ஷ்டம். அவரது சாதனைகளை உலக அதிகாரிகள் அங்கீகரித்துள்ளனர்.  சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியைப் பார்க்கும்போது, அவர்கள் அனைவரும் இந்தியாவை விரும்புகிறார்கள். முதலீடுகள் மற்றும் வாய்ப்புகளின் விருப்ப  தளமாக இந்தியா முன்னேறி உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதாரத்தைப் பொறுத்தவரை நாம் இருந்த நிலையைப் பாருங்கள். இப்போது நாம் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸை முந்தியுள்ளோம். ஜப்பானும், ஜெர்மனியும் 2030-ஆம் ஆண்டில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஆனால் இந்த சாதனைகள் உங்கள் பங்களிப்பால் தரமான விளிம்பைப் பெறும்.

ஒரு ஜனநாயக தேசத்தின் உறுப்பினராக இருப்பதில் நாம் ஏன் பெருமிதம் கொள்கிறோம்? பாரதம், ஜனநாயகத்தின் தாய்; மிகப் பெரிய ஜனநாயகம், ஏனென்றால் இங்கு அனைவரும் சமம். எனது கல்வி, வியர்வை, கடின உழைப்பு மற்றும் புலமை ஆகியவற்றால் நான் இங்கே இருக்கிறேன். 25 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் எங்கு இருப்பீர்கள் என்று நீங்கள் அனைவரும் கற்பனை செய்யும் கதை இதுதானா? இந்தத் தேசத்தின் தலைவிதியை வடிவமைப்பதில் நீங்கள் மிக முக்கியமான பங்கு வகிப்பீர்கள். ஏனென்றால், ஒவ்வொரு இளைஞனும் தனது திறமையைப் பயன்படுத்தவும், கனவுகளையும் அபிலாஷைகளையும் முழுமையாக நிறைவேற்றவும் ஒரு பொறிமுறை இப்போது நம்மிடம் உள்ளது.

 

காலனியாதிக்கத்தால் உந்தப்பட்ட, பிணைக்கப்படாத ஒரு சட்ட ஆட்சி நம்மிடம் இருந்தது. முன்பு 'தண்ட் விதான்' என்ற ஒரு அமைப்பு இருந்தது, இப்போது நமக்கு 'நியாய விதான்' உள்ளது, ஏனென்றால், நியாய விதான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் நமது நாகரிக நெறிமுறைகளிலிருந்து உருவாகிறது.

அறிவுள்ள மனிதனை விட ஆபத்தானது வேறு எதுவுமில்லை அவருக்கு உண்மை தெரியும் ஆனால் அவர் அதைப் பேசுவதில்லை. அவர் மற்றவர்களின் அறியாமையை அரசியல் சமத்துவத்திற்காகப் பயன்படுத்த விரும்புகிறார், அது மிகவும் ஆபத்தானது. நீங்கள் இந்த நாட்டின் புத்திசாலிகள், உங்களைப் போன்ற சேவையில் இல்லாத பலருக்கு, அவர்களின் லட்சியங்களை நிறைவேற்ற வெளியில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

நம் தேசத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நமது தேசமே நமது முதன்மையான முன்னுரிமை. பாரதத்தின் பெருமைக்குரிய குடிமக்கள், நாம்.

நமது சாதனையில் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். உலகம் புகழ்ந்து கொண்டிருக்கையில், நம்மில் சிலர் - வடிவமைப்பின் காரணமாகவோ அல்லது அறியாமையின் காரணமாகவோ நம்மை இழிவுபடுத்த முற்படுகிறோம். அதைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட வேண்டாம்.

யாரும் தவறு செய்யாதவர்கள் இல்லை, யாரும் மிகவும் புத்திசாலிகள் அல்ல. உங்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இருக்கலாம். அவற்றை நான் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். நாம் திறந்த மனதுடன் இருக்க வேண்டும்; பிற கருத்துக்கள்  சில நேரங்களில் சரியாக இருக்கலாம். ஆனால் உங்கள் கவனத்தைத் திசைதிருப்ப, உங்கள் சேவையின் பாதையிலிருந்து உங்களைத் திசைதிருப்புவதற்கான வடிவமைப்புடன் இதைச் செய்பவர்களிடம் உங்கள் வலிமையைக் காட்ட வேண்டும்.

*******


ANU/PKV/RB/DL



(Release ID: 1990056) Visitor Counter : 63


Read this release in: Kannada , English , Urdu , Hindi