பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அங்கன்வாடி மற்றும் குழந்தைகள் காப்பகம் (பால்னா) குறித்த தேசிய நிகழ்வு நடைபெற்றது

அங்கன்வாடி மற்றும் குழந்தைகள் காப்பகத் திட்டத்தின் நிலையான வழிகாட்டு நடைமுறைகள் வெளியீடு

Posted On: 22 DEC 2023 9:07AM by PIB Chennai

அங்கன்வாடி மற்றும் குழந்தைகள் காப்பகத் திட்டத்தின் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை வெளியிடுவதற்காக இத் திட்டத்தின் கீழ் உள்ள அங்கன்வாடி மற்றும் குழந்தைகள் காப்பகம் குறித்த தேசிய அளவிலான நிகழ்ச்சி இன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது.

 

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜுபின் இரானி தலைமையில், மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஆயுஷ் துறை இணையமைச்சர் டாக்டர் முஞ்பாரா மகேந்திரபாய் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில், மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் திரு.இந்தேவர் பாண்டே, மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் திருமதி ஆர்த்தி அஹுஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் திட்டத்தின் சாராம்சத்தையும், அதன் அம்சங்களையும் பதிவு செய்யும் குறும்படம் திரையிடப்பட்டது. அங்கன்வாடி மற்றும் குழந்தைகள் காப்பகத் திட்டத்தின் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜுபின் இரானி வெளியிட்டார்.

 

நிகழ்வில் பேசிய மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி , பெண்களுக்குக் குழந்தை பராமரிப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். ”சொந்த வீட்டை விட்டு விட்டு விவசாயக் கூலி வேலை செய்யும் பெண்கள் போன்றோரை சென்றடைவதே எங்களது முதல் முன்னுரிமை. இந்தத் திட்டத்தின் கீழ் கட்டுமானத் தொழிலாளியாகப் பணிபுரியும் பெண், பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்க ஒரு வாய்ப்பைப் பெறுகிறார், இதனால் அவர் தனது வாழ்வாதாரத்துடன் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை வழங்க முடியும்" என்று அவர் கூறினார். முன்மொழியப்பட்ட 17,000 குழந்தைகள் காப்பகங்கள் மட்டுமே ஒரு வரம்பு என்று கருத வேண்டாம் என்று மாநில, மாவட்ட அதிகாரிகள் மற்றும் சி.எஸ்.ஓ சிந்தனைத் தலைவர்களிடம் அவர் கூறினார்.

 

அங்கன்வாடி மையங்களின் உத்தேச எண்ணிக்கையை விட அதிகமாகத் திறக்க விரும்பும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தங்கள் ஆதரவை வழங்கும் என்று அவர் கூறினார். அந்தந்த பிராந்தியங்களில் உள்ள கட்டுமானத் தளங்களின் அடிப்படை மதிப்பீட்டை நடத்தவும், ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைப்புசாரா துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகம் உள்ள நகர்ப்புற மற்றும் பெரிய நகர்ப்புற பகுதிகளை வரைபடமாக்கவும், இதனால் குழந்தைகள் காப்பகங்கள் கட்ட பொருத்தமான இடங்களை அடையாளம் காணவும் மாநிலங்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

 

மேலும் பேசிய மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர், தனித்திறனில் இத்துறையில் பணியாற்ற விரும்பும் எவராலும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தேவைகள் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றை உறுதி செய்வதற்கான ஒரு கட்டமைப்பை மாநிலங்களுடன் கலந்தாலோசித்து அமைச்சகம் வழங்கும் என்று உறுதியளித்தார். பெண்களுக்குப் பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதில் குழந்தைப் பராமரிப்புத் துறையின் திறனை அவர் வலியுறுத்தினார். பதிவு செய்யப்படாத நிறுவனங்களில் குழந்தைகள் சுரண்டலுக்கு உள்ளான சம்பவங்கள் காரணமாக அவற்றை மூடுவதற்கான பிரதமரின் முயற்சிகளை அவர் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற நிறுவனங்கள் மூடப்படுவதை உறுதி செய்ய, அத்தகைய நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களுக்கும் போலீஸ் துறை மூலம் முன்கூட்டியே அவர்களைப் பற்றிய தகவல்களை சரிபார்ப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1989473

 

***

(Release ID: 1989473)

ANU/SMB/BS/RR


(Release ID: 1989491) Visitor Counter : 120