சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

நெடுஞ்சாலைகளில் வேக வரம்புக்குள் வாகனம் ஓட்டாவிட்டால் அபராதம் விதிப்பதற்கான வழிமுறைகள்

Posted On: 21 DEC 2023 2:56PM by PIB Chennai

மோட்டார் வாகனச் சட்டம் 1988 -ன் பிரிவு 112-ன் படி, அமைச்சகம் ஏப்ரல் 6, 2018 தேதியிட்ட அரசாணை 1522 (இ) மூலம் இந்தியாவில் வெவ்வேறு சாலைகளில் இயங்கும் பல்வேறு வகை மோட்டார் வாகனங்களுக்கு அதிகபட்ச வேக வரம்பை நிர்ணயித்துள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் 1988 -ன் பிரிவு 183 -ல் அதிக வேகத்தில் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கும் விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

 

மோட்டார் வாகனச் சட்டம், 1988-ல் உள்ள விதிகள் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளை நடைமுறைப்படுத்துவது அந்தந்த மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் அதிகார வரம்பிற்குள் வருகிறது.   

 

இத்தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

 

***

 (Release ID: 1989099)

 

ANU/SMB/BS/RS/KRS



(Release ID: 1989328) Visitor Counter : 71