நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் 99.8% குடும்ப அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன

Posted On: 20 DEC 2023 5:19PM by PIB Chennai

தற்போது, நாட்டில் பொது விநியோகத் திட்ட பயனாளிகளின்   சுமார் 99.8% குடும்ப அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைகள் திட்டம் ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் செயல்படுத்தப்பட்டுள்ளது.  இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து சுமார் 124 கோடி  பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன,   இது நாட்டில் சுமார் 80 கோடி பயனாளிகளின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இத்திட்டம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் போன்றவர்களுக்கு  பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது, அவர்கள் தற்காலிக வேலை தேடி அடிக்கடி தங்கள் வசிப்பிடத்தை மாற்றுகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ், பயனாளிகள் தங்களுக்கு விருப்பமான எந்த நியாயவிலைக் கடையிலிருந்தும்   தங்கள் உணவு தானியங்களை நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும், மின்னணு பாயின்ட் ஆஃப் சேல் (இபோஸ்) சாதனத்தில் பயோமெட்ரிக் அங்கீகாரத்துடன் பயோமெட்ரிக் அங்கீகாரத்துடன் பயன்படுத்துவதன் மூலம் வாங்குவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.  

ஆதார் இணைத்தல் மற்றும் எஃப்.பி.எஸ்.களில் ஈ.பி.ஓ.எஸ் சாதனங்களை நிறுவுவதன் காரணமாக, தற்போது, நாட்டில் சுமார் 97% பரிவர்த்தனைகள் மாதாந்திர அடிப்படையில் ஈ.பி.ஓ.எஸ் சாதனங்களைப் பயன்படுத்தி பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் வெளிப்படையான முறையில் செய்யப்படுகின்றன.  ஆதார் சட்டம் 2016 இன் பிரிவு -7 இன் கீழ் வெளியிடப்பட்ட 08/02/2017 தேதியிட்ட அறிவிக்கையின் கீழ் (அவ்வப்போது திருத்தப்பட்டபடி) ரேஷன் அட்டைகளின் ஆதார் இணைப்பை முடிக்க மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடுவை 31/03/2024 வரை இத்துறை நீட்டித்துள்ளது. அதுவரை, தகுதியான குடும்ப அட்டைகள் / பயனாளிகள் பட்டியலில் இருந்து எந்தவொரு உண்மையான பயனாளி / குடும்பமும் நீக்கப்படக்கூடாது என்றும்,  ஆதார் எண் இல்லை என்ற காரணத்திற்காக மட்டுமே  பிரதமரின் ஏழைகள்  நல உணவு உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு உணவு தானியங்களின் தகுதியான ஒதுக்கீடு மறுக்கப்படக்கூடாது என்றும் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், பயனாளிகளுக்கு ஆதார் ஒதுக்கப்படும் வரை, எட்டு அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்று அடையாள நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டும்

இத்தகவலை மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 1988732)

ANU/SM/IR/AG/KRS



(Release ID: 1988886) Visitor Counter : 59


Read this release in: English , Urdu , Hindi , Bengali