பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினர் மேம்பாட்டுத் திட்டம் (பி.எம்- அஜய்) என்பது 2021-22 முதல் மூன்று கூறுகளாக செயல்படுத்தப்படும் 100% மத்திய நிதியுதவி திட்டமாகும், அவை பின்வருமாறு:-
1) ஷெட்யூல்டு வகுப்பினர் அதிகம் வசிக்கும் கிராமங்களை 'ஆதர்ஷ் கிராமம்' பகுதியாக மேம்படுத்துதல்
ii) ஷெட்யூல்டு வகுப்பினரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக மாவட்ட/ மாநில அளவிலான திட்டங்களுக்கு மானியம் வழங்குதல்
iii) 'உயர்கல்வி நிறுவனங்களில் விடுதிகள் கட்டுதல்'
2023-24 ஆம் நிதியாண்டிற்கான இத்திட்டத்தின் மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.2050 கோடியாகும். திறன் மேம்பாடு, வருவாய் உருவாக்கம், அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றின் மூலம் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் ஷெட்யூல்டு வகுப்பினர் சமூகங்களின் வறுமையைக் குறைப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஷெட்யூல்டு வகுப்பினரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான மாவட்ட/ மாநில அளவிலான திட்டங்களுக்கான மானிய உதவி திட்டத்தின் கீழ், திறன் மேம்பாடு, சொத்து உருவாக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட விரிவான வாழ்வாதாரத் திட்டங்களுக்கான ஆலோசனைகளை மாநில / யூனியன் பிரதேச அரசுகள் சமர்ப்பிக்கின்றன, இதன் மூலம் ஷெட்யூல்டு வகுப்பு பயனாளிகளுக்கு சுயதொழில் வாய்ப்புகளை வழங்குகின்றன.
2022-23 மற்றும் 2023-24 நிதியாண்டில் (இன்று வரை), அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட திறன் மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் தலையீடுகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் முறையே 96,186 என உள்ளது.
2021-22ஆம் நிதியாண்டு முதல் ஷெட்யூல்டு வகுப்பினர் அதிகம் வசிக்கும் கிராமங்களை ஆதர்ஷ் கிராமமாக மேம்படுத்துவதற்காக மாநிலங்களுக்கு ரூ.1150.27 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. திட்ட வழிகாட்டுதல்களின்படி, ஆதர்ஷ் கிராமக் கூறு மூலம் மாநில / யூனியன் பிரதேச அரசுகளுக்கு வழங்கப்படும் நிதி, விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர்திரு ஏ. நாராயணசாமி இத்தகவலை தெரிவித்தார்.
***
(Release ID: 1988627)
ANU/PKV/SMB/RR/KRS