நிதி அமைச்சகம்
2017-18-ம் நிதியாண்டில் 2,071 கோடியாக இருந்த மின்னணு பணப்பரிவர்த்தனை எண்ணிக்கையின் மொத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 45 சதவீதம் அதிகரித்து 2022-23-ம் நிதியாண்டில் 13,462 கோடியாக அதிகரித்துள்ளது: மத்திய நிதித்துறை இணையமைச்சர்
Posted On:
19 DEC 2023 6:35PM by PIB Chennai
அனைத்து தரப்பினருடனும் அரசு மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக, சமீபத்திய ஆண்டுகளில் மின்னணு பணப்பரிவர்த்தனைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. மத்திய நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் கிசான்ராவ் கரத் இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.
2017-18-ம் நிதியாண்டில் 2,071 கோடியாக இருந்த மின்னணு பணப்பரிவர்த்தனையின் மொத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 45 சதவீதம் அதிகரித்து 2022-23-ம் நிதியாண்டில் 13,462 கோடியாக அதிகரித்துள்ளது என்று அமைச்சர் மேலும் கூறினார். நடப்பு 2023-24ம் நிதியாண்டில், 11.12.2023 வரை மின்னணு பணப்பரிவர்த்தனையின் எண்ணிக்கை 11,660 கோடியை எட்டியுள்ளது.
கடந்த 6 ஆண்டுகள் மற்றும் நடப்பாண்டில் மின்னணு பணப்பரிவர்த்தனையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த விவரங்களை அமைச்சர் பின்வருமாறு தெரிவித்தார்.
நிதி ஆண்டு
|
அளவு(கோடியில்)
|
2017-18
|
2,071
|
2018-19
|
3,134
|
2019-20
|
4,572
|
2020-21
|
5,554
|
2021-22
|
8,839
|
2022-23
|
13,462
|
2023-24
(டிசம்பர்11 வரை)
|
11,660
|
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1988370
***
ANU/AD/IR/RS/KRS
(Release ID: 1988440)
Visitor Counter : 171