சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சாகச சுற்றுலா தொடர்பான தேசிய மாநாட்டிற்கு சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்தது: "வளர்ச்சியடைந்த பாரதம் @2047: இந்தியாவை உலகளாவிய சாகச சுற்றுலா மையமாக திகழச்செய்தல்"

Posted On: 19 DEC 2023 5:48PM by PIB Chennai

சுற்றுலா அமைச்சகம் 2023 டிசம்பர் 18 முதல் 19 வரை குஜராத்தின் ஏக்தா நகரில் வளர்ச்சியடைந்த பாரதம் @2047 என்ற கருப்பொருளில் சாகச சுற்றுலா குறித்த தேசிய மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டின் நோக்கம் இந்தியாவை உலகளாவிய சாகச சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான உத்திகள் மற்றும் முன்முயற்சிகளை விவாதிப்பதற்கும் உருவாக்குவதற்கும் ஒரு தளத்தை வழங்குவதாகும்.

ழமையான காடுகள், பனி படர்ந்த இமயமலை, மலைப்பாங்கான புல்வெளிகள், ஆறுகள், ஏரிகள், ஈரநிலங்கள், சதுப்பு நிலங்கள், கடற்கரைகள், எரிமலைகள் மற்றும் பவளப்பாறைகள் என உலகின் இயற்கைச் சூழல்கள் இணையற்றவை. இவை தவிர புலிகள், சிங்கங்கள், யானைகள், காண்டாமிருகங்கள், சிறுத்தைப்புலிகள், காட்டெருமைகள், இந்திய காட்டெருமைகள் போன்ற புகழ்பெற்ற உயிரினங்களும், 1200 க்கும் மேற்பட்ட பறவையினங்களும் உள்ளன.

வளமான இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா வளங்கள் காரணமாக இந்தியா குறிப்பிடத்தக்க புவியியல் நன்மையைக் கொண்டுள்ளது:

இமயமலையின் 70 சதவீதம், 7,000 கி.மீ கடற்கரை, வெப்பமான மற்றும் குளிரான பாலைவனங்களைக் கொண்ட உலகின் மூன்று நாடுகளில் ஒன்றாகும்

மொத்த வனப்பரப்பில் 10-வது இடம்

யுனெஸ்கோவின் அங்கீகரிக்கப்பட்ட இயற்கை பாரம்பரிய தளங்களின் எண்ணிக்கை அடிப்படையில் 6 வது இடத்தில் உள்ளது

இயற்கை வளம் மற்றும் திறன் இருந்தபோதிலும், உலகளாவிய சாகச சுற்றுலாவில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. சாகச நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுகளுக்கான உலகளாவிய சந்தையாக மாற இந்தியா பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சாகச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இந்தியாவுக்கு மிகப்பெரிய திறன் உள்ளது. வடக்கு முதல் தெற்கு வரை மற்றும் கிழக்கு முதல் மேற்கு வரை, நாட்டின் புவியியல் நிலைமைகள் சாகச சுற்றுலா வாய்ப்புகளை மேம்படுத்துவதில் ஒரு போட்டியை அளிக்கின்றன..

இத்துறையின் வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக மத்திய அமைச்சகங்கள், மாநிலங்கள் மற்றும் தொடர்புடைய  தொழில்துறையினர் ஆகியோரை உள்ளடக்கிய சாகச சுற்றுலாவுக்கான தேசிய வாரியத்தையும் சுற்றுலா அமைச்சகம் அமைத்துள்ளது.

சுற்றுலா அமைச்சகம் 'சாகச சுற்றுலா இந்தியா இணையதளம்' மற்றும் 'சிறந்த சாகச சுற்றுலா மையம் போட்டி 2024' ஆகியவற்றை தொடங்கியுள்ளது.

2047-ம் ஆண்டுக்குள் 3 டிரில்லியன் டாலர் சுற்றுலா பொருளாதாரத்தை அடைய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. சாகச சுற்றுலாவுக்கு 800 பில்லியன் அமெரிக்க டாலர் பங்களிப்பை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது, உலகின் முதல் பத்து சாகச சுற்றுலா தலங்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.

 

ANU/SM/IR/RS/KRS

***


(Release ID: 1988390) Visitor Counter : 148


Read this release in: English , Urdu , Marathi , Hindi