மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இரண்டாம் கட்ட காசி தமிழ் சங்கம நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தமிழ் மாணவர் குழு படித்துறைகள், சுப்பிரமணிய பாரதியின் இல்லம், காஞ்சி மடம் ஆகியவற்றை பார்வையிட்டது

प्रविष्टि तिथि: 18 DEC 2023 4:45PM by PIB Chennai

இரண்டாம் கட்ட காசி தமிழ் சங்கம நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள  தமிழக பிரதிநிதிகள் ஹனுமன் படித்துறைக்குச் சென்று கங்கையில் புனித நீராடினர்படித்துறையில் இருந்த ஆச்சார்யர்கள் வாரணாசியின் பல்வேறு படித்துறைகளின் வரலாற்றை விவரித்தனர்.

 

பின்னர்படித்துறைகளில் அமைந்துள்ள புராதன கோயில்களை பார்வையிட்ட பிரதிநிதிகள்அவற்றின் வரலாறுதெய்வீகம்பெருமை ஆகியவற்றை அறிந்து கொண்டனர்ஹனுமான் படித்துறையில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் இல்லத்திற்கும் இந்தக் குழு சென்று குடும்ப உறுப்பினர்களை சந்தித்ததுஇக்குழுவினர் காஞ்சி மடத்திற்கு சென்று அதன் வரலாற்றை அறிந்து கொண்டனர்.

 

காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள ஆழமான தொடர்பைப் பற்றி அறிந்த இக்குழுபல ஆண்டுகளாக பல தமிழ் குடும்பங்கள் வசித்து வரும் ஹனுமன் படித்துறைகேதார் படித்துறைஹரிச்சந்திர படித்துறையைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பார்வையிட்டதுகாசி தமிழ் சங்கமத்தின் உணர்வை எடுத்துக்காட்டுகிறது.

 

இரண்டாம் கட்ட காசி தமிழ் சங்கமம் 2023,  டிசம்பர் 30 வரை நடைபெறும்.  கடந்த ஆண்டுகாசி தமிழ் சங்கமத்தின் முதல் கட்டம் 2022, நவம்பர் 16 முதல் டிசம்பர் 16 வரை நடத்தப்பட்டதுதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1400 பேர் (தலா 200 பேர் கொண்ட 7 குழுக்கள்பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறதுகாசியில் தங்கியிருக்கும் போதுஅவர்களின் சுற்றுப்பயணத் திட்டத்தின்படிபிரயாக்ராஜ், அயோத்திக்கும் செல்வார்கள்.


**********


(Release ID: 1987746)

ANU/SMB/IR/KPG/KRS

 


(रिलीज़ आईडी: 1987860) आगंतुक पटल : 104
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Kannada