உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
உணவு பதப்படுத்தும் துறையில் உள்கட்டமைப்பு மேம்பாடு, வர்த்தகம் மற்றும் முதலீட்டு மேம்பாடு
Posted On:
15 DEC 2023 3:10PM by PIB Chennai
உணவு பதப்படுத்துதல் துறையில் உள்கட்டமைப்பு மேம்பாடு, வர்த்தக மேம்பாடு, முதலீட்டு ஊக்குவிப்பு ஆகியவற்றுக்காக மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிக முதலீடுகளை பெற உலக உணவு இந்தியா - 2023 மாநாடு மற்றும் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. பல்வேறு மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் மாநில அரசுகளுடன் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகிறது. இத்துறையில் தொழில் மேம்பாட்டுக்காக 2023 ஜூன் 30 அன்று பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையிலான குழு கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த முயற்சிகளின் காரணமாக, 2023 நவம்பர் 3 முதல் 5 வரை ஏற்பாடு செய்யப்பட்ட உலக உணவு இந்தியா கண்காட்சி மற்றும் மாநாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகளவில் பங்கேற்றன. இதில் 10 மத்திய அமைச்சகங்கள், துறைகள், 6 வாரியங்கள் மற்றும் 25 மாநில அரசுத்துறைகள் பங்கேற்றன. உலக உணவு இந்தியா மாநாடு மற்றும் கண்காட்சியை ஒரு பகுதியாக வாங்குபவர் - விற்பனையாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இத்தகவலை மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை இணையமைச்சர் ஷோபா கரந்தலாஜே மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
ANU/PKV/PLM/AG/KV
(Release ID: 1986708)