கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு சேவை 2023 அக்டோபர் 14 அன்று தொடங்கப்பட்டது

प्रविष्टि तिथि: 15 DEC 2023 3:08PM by PIB Chennai

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு சேவை 2023 அக்டோபர் 14 அன்று தொடங்கப்பட்டது. குறிப்பாக அனைத்துவிதமான வானிலை சூழல்களிலும் சேவைகளை வழங்கக் கூடிய வகையில் அதிக எண்ணிக்கையிலான சேவை வழங்கும் நிறுவனங்களை ஈர்ப்பதற்காக, இந்த அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சி.பி.எஸ்.யுவான இந்திய கப்பல் கழகம், படகு போக்குச் சேவை வழங்கும் நிறுவனங்களை தேர்ந்தெடுக்க டெண்டருக்கு அழைப்பு விடுக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் வேண்டுகோளுக்கிணங்க, நாகப்பட்டினம் துறைமுகத்தின் வசதிகளை மேம்படுத்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ரூ.8 கோடி வழங்கியுள்ளது.

இத்தகவலை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

***

ANU/PKV/BS/RR/KV


(रिलीज़ आईडी: 1986703) आगंतुक पटल : 147
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी