தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
29.21 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்துள்ளனர்
Posted On:
14 DEC 2023 3:46PM by PIB Chennai
அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவுத்தளமான இ-ஷ்ரம் போர்ட்டலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 2021, ஆகஸ்ட் 26 அன்று அறிமுகப்படுத்தியது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அமைப்புசாரா தொழிலாளர்கள் சுய அறிவிப்பு அடிப்படையில் போர்ட்டலில் தன்னைப் பதிவு செய்ய இது அனுமதிக்கிறது. ஆதாருடன் இணைக்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவுத்தளத்தை உருவாக்குவதே இ-ஷ்ரம் போர்ட்டலின் முக்கிய நோக்கமாகும். அத்தகைய தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களை வழங்கவும் இது உதவுகிறது. 07.12.2023 நிலவரப்படி, 29.21 கோடிக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த போர்ட்டலில் பதிவு செய்துள்ளனர்.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திரு. ராமேஸ்வர் தெலி இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகஅளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 1986233)
ANU/SMB/PKV/RR/KRS
(Release ID: 1986435)
Visitor Counter : 89