விவசாயத்துறை அமைச்சகம்
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மூலம் விவசாயத்தை ஊக்குவித்தல்
Posted On:
12 DEC 2023 5:11PM by PIB Chennai
வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.ஏ.ஆர்) மற்றும் மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் (எஸ்.ஏ.யூ) மூலம் வேளாண் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை (ஆர் & டி) அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது. வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் பட்ஜெட் 2019-20 ஆம் ஆண்டில் ரூ.7846.17 கோடியிலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் ரூ.9504 கோடியாக அதிகரித்துள்ளது.
வேளாண் அறிவியல் மையத் திட்டத்தை நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அதன் பயன்பாடு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் செயல்விளக்கத்துடன் அரசு செயல்படுத்துகிறது. அதன் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, விவசாயிகள், விவசாய பெண்கள் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து வேளாண் அறிவியல் மையங்கள் பயிற்சி அளிக்கின்றன.
2022-23 ஆம் ஆண்டில் பயிர் உற்பத்தி, தோட்டக்கலை, மண்வளம் மற்றும் வள மேலாண்மை, கால்நடை உற்பத்தி மற்றும் மேலாண்மை, மனை அறிவியல் / மகளிர் மேம்பாடு, வேளாண் பொறியியல், தாவர பாதுகாப்பு மற்றும் மீன்வளம் ஆகியவற்றில் 19.53 இலட்சம் விவசாயிகளுக்கு பயிற்சியளித்து, 2,98,932 முன்னணி செயல் விளக்கங்களை நடத்தியுள்ளன.
இத்தகவலை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 1985471)
ANU/SM/BS/RR/KRS
(Release ID: 1985600)