உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உணவு பதப்படுத்தும் தொழிலுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகைகள்

प्रविष्टि तिथि: 12 DEC 2023 2:51PM by PIB Chennai

2021-22-ம் நிதியாண்டு முதல் 2026-27-ம் நிதியாண்டு வரை ரூ.10,900 கோடி மதிப்பீட்டில், உணவு பதப்படுத்துதல் தொழில்துறைக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம்  2021 மார்ச் 31 அன்று அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த திட்டம் மூன்று அம்சங்களைக் கொண்டுள்ளது: முதலாவதாக, 4 உணவு தயாரிப்பு பிரிவுகளில் உற்பத்தியை ஊக்குவித்தல் (சமைக்கத் தயாராக / சாப்பிடத் தயாராக இருக்கும் உணவுகள்; பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள்; கடல் பொருட்கள்; மற்றும் மொஸரெல்லா சீஸ்), இரண்டாவதாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் புதுமையான / கரிம தயாரிப்புகளை ஊக்குவித்தல், மூன்றாவதாக உலகளாவிய சந்தையில் இந்திய பிராண்டுகளை ஊக்குவிப்பதற்காக வெளிநாடுகளில் பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்தலை ஊக்குவித்தல். கூடுதலாக, சிறுதானிய அடிப்படையிலான தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கான பி.எல்.ஐ திட்டம் 2022-2023–ம் நிதியாண்டில் ரூ.800 கோடி ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்டது.

பி.எல்.ஐ பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் ரூ .7,126 கோடி முதலீடு செய்துள்ளதாகவும், 2023  ஏப்ரல்-செப்டம்பர் வரை ரூ .49,825 கோடி விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். திட்ட வழிகாட்டுதல்களின்படி, பி.எல்.ஐ பயனாளிகள் ஒரு குறிப்பிட்ட நிதியாண்டிற்கான ஊக்குவிப்பு உரிமைகோரல்களை அடுத்த நிதியாண்டின் டிசம்பர் 31 க்குள் வழங்க வேண்டும்.

இத்தகவலை மத்திய உணவுப்பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் திரு பசுபதி குமார் பரஸ் மக்களவையில் இன்று எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

***

ANU/SM/IR/AG/KPG

 


(रिलीज़ आईडी: 1985547) आगंतुक पटल : 148
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी