ஜல்சக்தி அமைச்சகம்
மழைநீரை சேமிக்க செயல் திட்டம்
Posted On:
11 DEC 2023 2:38PM by PIB Chennai
தண்ணீர் ஒரு மாநில விவகாரம் தொடர்புடையது என்பதால், மழைநீரைச் சேமிப்பதற்கான செயல்திட்டத்தை உருவாக்கும் பொறுப்பு முதன்மையாக மாநில அரசுகளிடம் உள்ளது. தொழில்நுட்ப மற்றும் நிதியுதவிகளை வழங்குவதன் மூலம் மாநிலங்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு துணைபுரிகிறது. இருப்பினும், ஜல் சக்தி அமைச்சகம் "ஜல் சக்தி திட்டம்: மழைநீரை சேகரிப்போம்"-2023 என்ற இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது, இது ஜல்சக்தி திட்டங்களின் வரிசையில் நான்காவது முறையாகும், இது குடியரசுத் தலைவரால் 04.03.2023 அன்று நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 04.03.2023 முதல் நவம்பர் 30 வரை "குடிநீருக்கான ஆதார நிலைத்தன்மை" என்ற கருப்பொருளுடன் செயல் படுத்துவதற்காக தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் படி நீர் சேமிப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த இயக்கம் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கும், நீர் சேமிப்பின் ஒரு பெரிய கொள்கையை நோக்கி செயல்படுவதற்கும் ஒரு பெரிய வாய்ப்பை வழங்குகிறது.
மத்திய நிலத்தடி நீர் வாரியம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் கலந்தாலோசித்து நிலத்தடி நீருக்கான செயற்கை செறிவூட்டலுக்கான மாஸ்டர் பிளான் - 2020 ஐ தயாரித்துள்ளது, இது மதிப்பிடப்பட்ட செலவு உட்பட நாட்டின் வெவ்வேறு நிலப்பரப்பு நிலைமைகளுக்கான பல்வேறு கட்டமைப்புகளைக் குறிக்கும் பெரிய அளவிலான திட்டமாகும். 185 பில்லியன் கியூபிக் மீட்டர் (பி.சி.எம்) பருவ மழையைப் பயன்படுத்துவதற்காக நாட்டில் சுமார் 1.42 கோடி மழைநீர் சேகரிப்பு மற்றும் செயற்கை ரீசார்ஜ் கட்டமைப்புகளை உருவாக்க மாஸ்டர் பிளானில் ஏற்பாடுகள் உள்ளன.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப அவற்றை தத்தெடுப்பதற்கான மாநிலங்களின் வழிகாட்டுதலுக்கான வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது. மாதிரி கட்டிட துணைச் சட்டங்கள், 2016 மற்றும் நகர்ப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டுத் திட்டம் உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல் வழிகாட்டுதல்கள், 2014 ஆகியவற்றில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளின் தேவை குறித்து போதுமான கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் துடு இன்று ராஜ்ய சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
ANU/SMB/BS/AG/KPG
(Release ID: 1985166)
Visitor Counter : 119