சுற்றுலா அமைச்சகம்

விஜயவாடாவில் கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

Posted On: 10 DEC 2023 5:47PM by PIB Chennai

விஜயவாடா, தும்மலப்பள்ளி கலாக்ஷேத்திரத்தில், ஆந்திர அரசின் சுற்றுலாத் துறை அமைச்சர் திருமதி ஆர்.கே.ரோஜா, ஆந்திர அரசின் நிதியமைச்சர் திரு. புக்கன ராஜேந்திரநாத், மத்திய அரசின் சுற்றுலாத் துறை செயலாளர் திருமதி வி. வித்யாவதி ஆகியோர் முன்னிலையில், கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனத்தை மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர், தெலுங்கு கலாச்சாரத்தின் பெருமைமிக்க பாரம்பரியத்தையும், காலத்தால் அழியாத பாடல்களின் குறிப்பிடத்தக்க தொகுப்பை உருவாக்குவதில் செவ்வியல் மரபுகளுக்கு தெலுங்கு மொழியின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளையும் நினைவு கூர்ந்தார்.

ஆந்திராவில் முதன்முறையாக பிரமாண்ட இசை விழாவை நடத்த எடுத்த முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த அவர், "தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரிகளின் பாடல்களைக் கேட்டவுடன் தெலுங்கின் அழகைக் கற்றுக்கொள்ளவும் புரிந்துகொள்ளவும் தொடங்கினேன். தெலுங்கு மொழியின் அழகு போற்றப்பட வேண்டிய ஒன்று. இப்பகுதியில் உள்ள நகரங்கள் மற்றும் சம்ஸ்தானங்கள் பாரம்பரிய இசைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளன. அந்த மகிமையான மரபுகளை உயிர்ப்புடன் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டிய நேரம் இது. இது ஒரு வருடாந்திர அம்சமாக மாற வேண்டும் என்றும் ராஜமுந்திரி, விசாகப்பட்டினம் போன்ற பிற முக்கிய நகரங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனத்தின் தொடக்க பதிப்பை விஜயவாடா மற்றும் ஆந்திராவிற்கு கொண்டு வந்ததற்காக ஆந்திர அரசின் சுற்றுலா அமைச்சகம் மற்றும் கலாச்சார அமைச்சகத்திற்கு நன்றி தெரிவித்த ஆந்திர அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் திருமதி ஆர்.கே.ரோஜா, இசையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், பாரம்பரிய இசையைத் தொடர இளைஞர்களை வலியுறுத்தினார். கர்நாடக இசையை வளர்ப்பதில் ஆந்திரா மற்றும் தெலுங்கு மொழியின் பங்களிப்பையும் அவர் எடுத்துரைத்தார்.

இந்த மூன்று நாள் பாரம்பரிய இசை விழாவில் நாட்டின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களின் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் மற்றும் பிராந்திய உணவு வகைகள், உள்ளூர் கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறிகளின் கண்காட்சி மற்றும் விற்பனை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் நடைபெறும்.

இந்த நிகழ்வு புகழ்பெற்ற இந்திய இசை பாரம்பரியத்தைப் பற்றிய ஒரு வசீகரமான பார்வையை வழங்குகிறது. திறமையான இசைக்கலைஞர்களின் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளைக் கொண்டிருந்தது. முதல் நாள், காலை அமர்வில், ஆந்திராவைச் சேர்ந்த கோனுகுந்தலா சகோதரர்கள், ஸ்ரீ ஜி.நாகராஜு மற்றும் ஸ்ரீ சாய்பாபு ஆகியோரின் ஆத்மார்த்தமான நாகஸ்வரத்தின் ஆத்மார்த்தமான மெல்லிசைப் பாடல்களும், ஆந்திராவின் புகழ்பெற்ற இரட்டையர்களான தெண்டுகுரி சதாசிவ கணபதி மற்றும் தெண்டுகுரி காசி விஸ்வநாத சர்மா ஆகியோரின் வேத பாராயணமும், தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீ உமையாள்புரம் கே.சிவராமனின் வசீகரிக்கும் தாள வாத்திய கச்சேரியும் பார்வையாளர்களை கவர்ந்தன.

பிற்பகலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில், சென்னையைச் சேர்ந்த பிரபல ஓவியர் ராதா பாஸ்கரின் ஸ்ரீ தியாகராஜரின் தெலுங்கு பாடல்களில் உள்ள கீர்த்தனைகளின் வடிவம் மற்றும் உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட ஆழமான சொற்பொழிவு நிகழ்ச்சிகளும், அதைத் தொடர்ந்து டாக்டர் அஸ்வதி மற்றும் சஜனா சுதீர் தலைமையில் கேரளாவைச் சேர்ந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மாணவர்களால் தியாகராஜ சுவாமியின் திவ்யநாம சங்கீர்த்தனங்களின் குழு இசை நிகழ்ச்சியும், முப்பவரப்பு சிம்ஹாசல சாஸ்திரியின் வசீகரமான ஹரிகதா நிகழ்ச்சியும் பார்வையாளர்களை கவர்ந்தன.

மாலை அமர்வில் கர்நாடக குரலிசை நிகழ்ச்சிகள் கரிமெல்லா பாலகிருஷ்ண பிரசாத், பந்துல ராமா மற்றும் ராம கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட முன்னணி இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் பார்வையாளர்களை கவர்ந்தன. திரு. பெரிய தியாகராஜு மற்றும் கலைஞர்களின்i தலைமையில் வீணை வேணுவு வயலின் வசீகரிக்கும் குழுவினருடன் நாள் நிறைவடைந்தது.

இந்த நிகழ்வின் மற்றொரு தனித்துவமான ஈர்ப்பு தும்மலப்பள்ளி கலாக்ஷேத்திரத்தில் ஒரு இசை அறிஞரின் தனித்துவமான முயற்சியால் பெறப்பட்ட கவனமாக பாதுகாக்கப்பட்ட மற்றும் மீட்டெடுக்கப்பட்ட இசைக்கருவிகளின் தொகுப்பைக் காட்சிப்படுத்தும் பண்டைய இசைக்கருவிகள் கண்காட்சியாகும். இது பழங்கால இசைக்கருவிகளை மீண்டும் கட்டியெழுப்புவதிலும் மீட்டெடுப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

ஆந்திர திட்டக்குழு துணைத் தலைவரும், விஜயவாடா மத்திய தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஸ்ரீ மல்லாடி விஷ்ணு, விஜயவாடா மேயர் திருமதி ராயன பாக்ய லட்சுமி, சங்கீத நாடக அகாடமியின் தலைவர் திருமதி சந்தியா ப்ரேச்சா மற்றும் பிற பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

----------


ANU/AD/PKV/DL



(Release ID: 1984799) Visitor Counter : 54