குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் டிசம்பர் 11 முதல் 12 வரை உத்தரப்பிரதேசத்தில் பயணம்

Posted On: 10 DEC 2023 6:34PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2023 டிசம்பர் 11 முதல் 12 வரை உத்தரப்பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்

டிசம்பர் 11-ம் தேதி வாரணாசியில் நடைபெறும் மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் 45-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் கலந்து கொள்கிறார். அன்று மாலை, லக்னோவில் நடைபெறும் டிவைன் ஹார்ட் பவுண்டேஷனின் (இந்தியா) 27 வது ஆண்டு விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.

டிசம்பர் 12-ம் தேதி லக்னோவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் 2-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் கலந்து கொள்கிறார்.

----------


ANU/AD/PKV/DL


(Release ID: 1984788)