தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான சபத யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது: மீனாட்சி லேகி

Posted On: 09 DEC 2023 5:38PM by PIB Chennai

தெற்கு டெல்லியில் உள்ள சாணக்கியபுரி பகுதியில் வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரையின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சாரத் துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி இன்று பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் வளர்ச்சியடைந்த இந்தியா உறுதிமொழி எடுத்துக் கொண்ட அவர், பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடினார். அமைச்சர் தனது உரையில், தற்போதைய நிர்வாகத்தில் நல்லாட்சியின் பங்கை வலியுறுத்தினார், இதுபோன்ற பிரச்சாரங்கள் மூலம் அரசாங்கம் எவ்வாறு மக்களைச் சென்றடைய முடியும் என்பதை சுட்டிக்காட்டினார்.

தேவைப்படுபவர்களின் வீட்டு வாசலை நோக்கி நிர்வாகம் நேரடியாக சென்றடைவதை மோடி அரசு உறுதி செய்கிறது என்று அவர் வலியுறுத்தினார் . கடந்த காலத்தின் மறக்க முடியாத மாவீரர்களை முன்னிறுத்துவதன் மூலம் தற்போதைய அரசு நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை எவ்வாறு புதுப்பித்துள்ளது என்பதையும் திருமதி லேகி எடுத்துரைத்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தின் உளவுப் பிரிவின் தலைவரான நீரா ஆர்யாவை அவர் நினைவு கூர்ந்தார். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய லேகி, "நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய அனைவரையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். சாலைகள், இடங்களுக்கு அவர்களின் பெயர்களை வைப்பதன் மூலம் அவர்களை நம் நினைவுகளில் வைத்திருக்க வேண்டும். அவர்களை மறக்கக் கூடாது என்றார்.

மேலும் பேசிய திருமதி மீனாட்சி லேகி, பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்திற்கு முன்பு, சாமானிய மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட திட்டங்கள் ஒருபோதும் சரியான கைகளை சென்றடையவில்லை என்பதைப் பற்றி பேசினார். லேகியின் கூற்றுப்படி, ஊழல் நாட்டை ஆட்டிப்படைத்தது, திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணம் தவறான பாக்கெட்டுகளுக்கு சென்றது என்று குறிப்பிட்டார்.

வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான சபத யாத்திரை குறித்து பேசிய அமைச்சர், திட்டங்களைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பதும், இந்த திட்டங்களிலிருந்து அவர்கள் பயனடைய உதவுவதும் அரசின் கடமை என்று வலியுறுத்தினார்.

இந்த முயற்சியின் வெற்றி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்க வேண்டும். அரசு வீடு வீடாகச் சென்று சுகாதார பரிசோதனைகள் நடத்துவதுடன், முகாம்களை நடத்தி வருகிறது. பிரதமர் மோடி வழங்கிய உத்தரவாதங்களை இன்னும் பெறாதவர்களுக்கு உதவ மத்திய அரசின் முயற்சிகளை அமைச்சர் எடுத்துரைத்தார்.

மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான சபத யாத்திரை  தொடங்கப்பட்டுள்ளது. டெல்லியில், நவம்பர் 28 ஆம் தேதி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா நகர்ப்புற தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு வேன்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 5  தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு வேன்கள் டெல்லியின் 11 மாவட்டங்களில் 600 க்கும் மேற்பட்ட இடங்களை உள்ளடக்கி பயணம் மேற்கொண்டுள்ளன. பிரதமரின் ஸ்வநிதி, முத்ரா கடன்கள், ஸ்டாண்ட் அப் இந்தியா மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் பேமெண்ட் புரட்சி , பிரதமரின் இ-பஸ் சேவை, ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் வீட்டு வசதி திட்டம் (நகர்ப்புறம்) பிரதமரின் உஜ்வாலா திட்டம் ஆகியவை  தொடர்புடைய மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதையும், முழுமையாக நிறைவேற்றப்படுவதையும் நகர்ப்புற பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பிரதமரின் ஸ்வநிதி முகாம், சுகாதார முகாம், ஆயுஷ்மான் அட்டை முகாம், ஆதார் புதுப்பிப்பு முகாம், பிரதமர் உஜ்வாலா முகாம் ஆகியவற்றின் மூலம்  டெல்லியின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் நேரடி சேவைகள் வழங்கப்படுகின்றன. தேசிய தலைநகரின் மக்கள் குறிப்பாக பெண்கள் இந்த யாத்திரையில் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.

----------


ANU/AD/BS/DL


(Release ID: 1984626) Visitor Counter : 180


Read this release in: English , Urdu , Hindi