மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

மிக்ஜாம் புயல் மழையால் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் நாளை பார்வையிடுகிறார்

Posted On: 08 DEC 2023 7:18PM by PIB Chennai

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கன மழையால் சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்ய மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் மற்றும் ஜல்சக்தித்துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், நாளை சென்னை வருகிறார்.

முன்னதாக டிசம்பர் 7 அன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் மூலம் வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், நாளை சென்னை வருகை தரும் திரு ராஜீவ் சந்திரசேகர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்த்தின் முடிச்சூர், வரதராஜபுரம், சென்னையின் மேற்கு மாம்பலம் மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

***

AD/IR/RS/KRS

 (Release ID: 1984167) Visitor Counter : 66


Read this release in: English , Urdu , Hindi