விவசாயத்துறை அமைச்சகம்
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளைப் பதிவு செய்தல் மற்றும் இழப்பீடு கோருதல்
प्रविष्टि तिथि:
08 DEC 2023 5:17PM by PIB Chennai
2016 கரீஃப் பருவத்தில் இருந்து நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (பி.எம்.எஃப்.பி.ஒய்) மாநிலங்கள் மற்றும் விவசாயிகளின் விருப்பத்துக்கு உட்பட்டதாகும். விதைப்புக்கு முந்தைய பருவம் முதல் அறுவடைக்குப் பிந்தைய நிலைகள் வரை தடுக்க முடியாத அனைத்து இயற்கை இடர்ப்பாடுகளுக்கும் எதிராக விவசாயிகளுக்கு மிகக் குறைந்த பிரீமியத்தில் இத்திட்டத்தின் கீழ் விரிவான இடர் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 30.11.2023-ல் கிடைத்த தரவுகளின்படி, ரபி மற்றும் கரீஃப் பருவத்தில் முறையே 435 லட்சம் மற்றும் 689 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 2022-23 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளில் முறையே 33.4% மற்றும் 41% விவசாயிகளின் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2022-23 ரபி பருவத்திற்கான 7.8 லட்சம் விவசாயிகளின் விண்ணப்பங்களுக்கு ரூ.3,878 கோடி செலுத்தப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு கைலாஷ் சௌத்ரி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 1984068)
ANU/SMB/PKV/AG/KRS
(रिलीज़ आईडी: 1984133)
आगंतुक पटल : 205