ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மருந்துகளின் விலையை நிர்ணயிப்பதற்கான விதிமுறைகள்

Posted On: 08 DEC 2023 3:05PM by PIB Chennai

மருந்து விலை கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை (டி.பி.சி.ஓ) 2013-இன் தற்போதைய விதிகளின்படி, மருந்து தயாரிப்புக்கான பொருளின் கொள்கலன், அதன் அதிகபட்ச சில்லறை விலை, அதற்கு முந்தைய "அதிகபட்ச சில்லறை விலை" மற்றும் அதற்குப் பிறகு "அனைத்து வரிகளையும் உள்ளடக்கியது" என்ற வார்த்தைகளைக் குறிப்பிட வேண்டும். மேலும், டிபிசிஓ, 2013-ன்படி ஒவ்வொரு உற்பத்தியாளரும் டீலர்களுக்கு ஒரு விலைப் பட்டியலை வழங்க வேண்டும், அவர்கள் அதை வணிகம் செய்யும் வளாகத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியில் காண்பிக்க வேண்டும். எந்தவொரு நபரும் தற்போதைய விலைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட அல்லது கொள்கலன் அல்லது லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட அதிக விலைக்கு  விற்கக்கூடாது என்றும் டிபிசிஓ, 2013 கூறுகிறது.  

டிபிசிஓ, 2013 இன் தொடர்புடைய விதிகளின் கீழ் அதிக கட்டணம் வசூலிக்கும் நிகழ்வுகள் என்பிபிஏவால் கையாளப்படுகின்றன. எவ்வாறாயினும், அதிகபட்ச சில்லறை விலைக்குள், மருந்துக் கடைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சலுகை வழங்குவது, வணிக பரிசீலனை மற்றும் கட்டுப்பாட்டு ஆணையின் வரம்பிற்குள் இல்லாத வணிக நடைமுறையால் வழிநடத்தப்படுகிறது.

இத்தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் திரு பகவந்த் குபா மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***

ANU/SMB/PKV/AG/KV


(Release ID: 1984032) Visitor Counter : 81