ரெயில்வே அமைச்சகம்

2023 செப்டம்பர் 30 வரை 2,94,115 காலிப்பணியிடங்கள் கடந்த 5 ஆண்டுகளில் நிரப்பப்பட்டுள்ளன

Posted On: 08 DEC 2023 3:05PM by PIB Chennai

காலியிடங்களை உருவாக்குவதும் நிரப்புவதும் இந்திய ரயில்வேயில் அதன் அளவு, இடஞ்சார்ந்த விநியோகம், செயல்பாட்டின் முக்கியத்துவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்ட ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். புதிய சேவைகள், புதிய தொழில்நுட்பங்கள், இயந்திரமயமாக்கல், புதிய அமைப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு காலிப்பணியிடங்கள் மற்றும் களத்தின் தேவைகளை எதிர்பார்த்து அவ்வப்போது ஆட்சேர்ப்புகள் செய்யப்படுகின்றன. முன்னுரிமைகளில் மாற்றம், தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு பிரிவுகளில் மனிதவளத்தின் தேவையும் வேறுபடுகிறது. எனவே, நிரப்பப்பட வேண்டிய காலிப்பணியிடங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தொடர்ச்சியான முறையில் நிரப்புவதற்கு ஒரு துடிப்பான செயல்முறையை ரயில்வே கொண்டுள்ளது.  இந்தக் காலிப்பணியிடங்கள் முதன்மையாக செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப ஆட்சேர்ப்பு முகமைகளுடன் ரயில்வேயால் நிரப்பப்படுகின்றன.  கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தமுறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. 2023 செப்டம்பர் 30 வரை 2,94,115 காலிப்பணியிடங்கள் இந்தமுறையில் நிரப்பப்பட்டுள்ளன.

ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

***

ANU/SMB/PKV/AG/KV



(Release ID: 1984018) Visitor Counter : 63


Read this release in: English , Hindi , Urdu