தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

இ-ஷ்ரம் இணையதளத்தின் சிறப்பு அம்சங்கள்

Posted On: 07 DEC 2023 5:08PM by PIB Chennai

அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்கள் தொடர்பான விரிவான தேசிய தரவுத் தளத்தை உருவாக்கும் நோக்கில் அவர்களுக்கான பதிவுத் தளமாக, தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் 26.08.2021 அன்று இ- ஷ்ரம் தளத்தைத் தொடங்கியது. 30 தொழில் பிரிவுகளில் 400 துணைத் தொழில்களின் பிரிவுகளின் கீழ் பணிபுரியும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சுய பிரகடன அடிப்படையில் இந்தத் தளத்தில் பதிவு செய்யலாம்.

நாடு முழுவதும் 29-11-2023 வரை இந்தத் தளத்தில் 29,19,80,418 பேர் பதிவு செய்துள்ளனர்.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 29-11-2023 வரை இந்தத் தளத்தில் 85,39,625 பேர் பதிவு செய்துள்ளனர்.

இ-ஷ்ரம் தளத்தின் சில சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் பின்வருமாறு:

•    முழுமையான ஆதார் சரிபார்ப்பு முறையில் பதிவு மேற்கொள்ளப்படுகிறது.  எந்தவொரு அமைப்புசாரா தொழிலாளரும் சுய பிரகடன அடிப்படையில் பதிவு செய்யலாம்.

•    புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்ப விவரங்களைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடு இ-ஷ்ரமில் சேர்க்கப்பட்டுள்ளது.

•    கட்டுமானத் தொழிலாளர்களின் தரவுகளை அந்தந்த கட்டட மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர் வாரியங்களில் பதிவு செய்வதற்கு வசதியாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான ஏற்பாடு இஷ்ரமில் சேர்க்கப்பட்டுள்ளது.

•    இஷ்ரம், தேசிய தொழில் சேவை தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஒரு அமைப்புசாரா தொழிலாளர் தனது தனித்துவக் கணக்கு எண்ணை (யுஏஎன்) பயன்படுத்தி பதிவு செய்து பொருத்தமான வேலைவாய்ப்புகளைத் தேடலாம்.

•    இஷ்ரம், பிரதமரின் ஷ்ரம்-யோகி மான்தன் உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது 18 முதல் 40 வயதுக்குட்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டமாகும்.

•    அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் தொழில் பழகுநர் வாய்ப்புகளை வழங்குவதற்காக, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் திறன் இந்தியா டிஜிட்டல் தளத்துடன் இஷ்ரம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

•    இ ஷ்ரம், மைஸ்கீம் தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. mySchemeஎன்பது ஒரு தேசிய தளமாகும். இது அரசாங்க திட்டங்களை ஒரே இடத்தில் தேடி விவரங்களைத் தெரிந்து கொள்வதை கண்டுபிடிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்தகவலை மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

*****

 

ANU/AD/PLM/KV



(Release ID: 1983956) Visitor Counter : 70


Read this release in: English , Urdu , Manipuri