திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பது தொடர்பாகத் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் தமது அதிகாரிகளுக்கு இரண்டு நாள் கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தியது
Posted On:
07 DEC 2023 4:10PM by PIB Chennai
'பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயல்பாட்டு நிகழ்வுகள்' என்ற ஆண்டு இயக்கத்தின் கீழ், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் புதுதில்லியில் உள்ள கௌஷல் பவனில் தமது அதிகாரிகளுக்கு “பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் – 2013” தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டத்தை நேற்றும் இன்றும் (2023 டிசம்பர் 06 மற்றும் 07) நடத்தியது.
திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் திரு அதுல் குமார் திவாரி மற்றும் அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகள் மற்றும் ஐநா பெண்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் தொடக்க அமர்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு திவாரி, பணியிடத்தில் ஒவ்வொரு அதிகாரியும் சரியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இதுபோன்ற கூட்டங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றும் கூறினார். அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பான சூழல் என்பது பணியிட கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறுவது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.
ஐநா மகளிர் அமைப்பின் இந்தியாவுக்கான துணைப் பிரதிநிதி திருமதி காந்தா சிங், திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் முயற்சிகளையும், பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பதற்கான அதன் அர்ப்பணிப்பையும் பாராட்டினார். பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் உறுதிமொழியும் இந்தக் கூட்டத்தில் ஏற்கப்பட்டது.
*******
ANU/SMB/PLM/KV
(Release ID: 1983749)
Visitor Counter : 96