சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

சிறுபான்மை சமூகங்களுக்கு உதவுவதற்கான கல்வி வலுவூட்டல் திட்டங்கள்

Posted On: 07 DEC 2023 3:32PM by PIB Chennai

திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஆகியவற்றின் பல்வேறு திட்டங்கள் மூலம் சிறுபான்மையினர், குறிப்பாக பொருளாதாரத்தில் நலிவுற்ற மற்றும் சமூகத்தில் நலிவடைந்த பிரிவினர் உட்பட அனைத்து தரப்பினரின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக மத்திய  அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

சிறுபான்மையினர் நல அமைச்சகம் குறிப்பாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஆறு சிறுபான்மை சமூகங்களின் சமூக-பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.

கல்வி வலுவூட்டல் திட்டங்கள்

மெட்ரிக் முன் கல்வி உதவித் தொகைத் திட்டம்

மெட்ரிக் பிந்தைய கல்வி உதவித் தொகைத் திட்டம்

தகுதி மற்றும் சராசரி அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டம்

வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வலுவூட்டல் திட்டங்கள்

1)      சிறுபான்மை சமூகங்களுக்கான முந்தைய திட்டங்கள் தற்போது பிரதமரின் விராசத் கா சம்வர்தன் (பி.எம்.விகாஸ்)' என  ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

    

2. தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகம், சிறுபான்மையினருக்கு மறுநிதியளிப்பு முறையில் சலுகைக் கடன்களை வழங்கி, அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கும் உதவுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதில் என்.எம்.டி.எஃப்.சி.க்கு அரசு ஆதரவளிக்கிறது.

இதுதவிர சிறப்புத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்தகவலை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

*******

ANU/SMB/PKV



(Release ID: 1983676) Visitor Counter : 58


Read this release in: English , Urdu , Hindi , Punjabi