பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்

Posted On: 07 DEC 2023 2:19PM by PIB Chennai

2014 ஆம் ஆண்டில் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழின் (டிஎல்சி) கீழ் வழங்கப்பட்ட மொத்த சான்றிதழ்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் பின்வருமாறு:

காலம் (ஏப்ரல் 1 - மார்ச் 31)     மொத்த டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ் மொத்த மத்திய அரசு ஊழியர்கள்

2014-2015   109751     92658

2015-2016   1315150    726102

2016-2017   5058451    1102313

2017-2018   9901542    1262258

2018-2019   8994834    1503144

2019-2020   9965509    1901710

2020-2021   9897459    1957862

2021-2022   11191451   2372562

2022-2023   14129489   4269529

2023 - 28 நவம்பர், 2023     11310388   3789571

•    நவம்பர் 2023-ல், ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், அமைச்சகங்கள் / துறைகள், யுஐடிஏஐ மற்றும் எம்.இ.ஐ.டி.ஒய் ஆகியவற்றின் மூலம் 100 நகரங்களில் 500 இடங்களை உள்ளடக்கிய நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் இயக்கம்  2.0 ஐ இத்துறை ஏற்பாடு செய்தது. இத்தகைய அர்ப்பணிப்புமிக்க இயக்கங்கள்  ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழ்களை தங்குதடையின்றி, தங்கள் வீடுகளில் இருந்தபடியே சமர்ப்பிக்க உதவுகின்றன.

•    ஓய்வூதியர்களுக்கான  வங்கியாளர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஓய்வுக்கு முந்தைய ஆலோசனைகள் ஆகியவை உடல் ரீதியாகவும், ஆன்லைனிலும் டி.எல்.சி.க்களை, குறிப்பாக முக அங்கீகார நுட்பத்தை அறிமுகப்படுத்தவும் பிரபலப்படுத்தவும் வழக்கமான அடிப்படையில் நடத்தப்படுகின்றன.

இத்தகவலை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர்நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

*******

ANU/SMB/PKV/KV

 


(Release ID: 1983587) Visitor Counter : 114


Read this release in: English , Urdu , Hindi