வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியாவின் சரக்குப் போக்குவரத்து செயல்திறனை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்களை உலக வங்கிக் குழுவினரிடம் விளக்குவதற்கான சந்திப்ப்புக்குத் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை ஏற்பாடு செய்தது

Posted On: 07 DEC 2023 12:48PM by PIB Chennai

இந்தியாவின் சரக்குப் போக்குவரத்து செயல்திறனை மேம்படுத்துவதற்காக தற்போது எடுக்கப்பட்டுள்ள முன்முயற்சிகள் மற்றும் அடுத்து மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து உலக வங்கி குழுவிடம் விளக்குவதற்கான கூட்டம் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையால் (டிபிஐஐடி) நடத்தப்பட்டது.

இந்தத் துறையின் சரக்குப் போக்குவரத்துப் பிரிவு சிறப்பு செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா தலைமையில் புதுதில்லியில் இக்கூட்டம் நேற்று (06-12-2023) நடைபெற்றது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சம், ரயில்வே அமைச்சகம், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து  மற்றும் நீர்வழிப் பாதைகள்  அமைச்சகம், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் மற்றும் உலக வங்கியின் உறுப்பினர்கள் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் இலக்கு நோக்கிய செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் சரக்குப் போக்குவரத்து செயல்திறனை மேம்படுத்துவற்கு தரவுகள் அடிப்படையில் திட்டங்கள் உருவாக்கப்படுவதாகவும் சிறப்பு செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா எடுத்துரைத்தார். இந்த முயற்சிகள் இது தொடர்பான உலக வங்கித் தரவரிசையில் இந்தியாவின் நிலையை மேம்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

 

இந்தக் கூட்டத்தின்போது, இந்தியாவின் சரக்குப் போக்குவரத்து செயல்திறனை மேம்படுத்துவதற்காகப் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை டிபிஐஐடி காட்சிப்படுத்தியது.

ரயில்வே வழித்தடங்களை 100 சதவீதம் மின்மயமாக்குதல், தேசிய கடல்சார் ஒற்றை சாளர தளமான என்.எல்.பி. மரைன் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது, 35 பன்னோக்கு மாதிரி சரக்குப் போரக்குவரத்துப் பூங்காக்கள் அமைப்பது போன்ற பல நடவடிக்கைகள் பற்றி  டிபிஐஐடி விளக்கியது.

சரக்குப் போக்குவரத்துத் துறையில் டிஜிட்டல் நடைமுறைகளை ஊக்குவிப்பதில் இந்தியா மேற்கொண்டு வரும் உறுதியான நடவடிக்கைகளை உலக வங்கியின் மூத்தப் போக்குவரத்துப் பொருளாதார நிபுணர் திரு ஜீன்-பிரான்சுவா அர்விஸ் பாராட்டினார்.

*******

ANU/SMB/PLM/KV



(Release ID: 1983456) Visitor Counter : 81


Read this release in: English , Urdu , Hindi , Marathi