மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தொழிற்கல்வியைப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்ப்பதில் தேசிய கல்விக் கொள்கை கவனம் செலுத்துகிறது: மத்திய இணையமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி தகவல்
Posted On:
06 DEC 2023 5:01PM by PIB Chennai
தேசிய கல்விக் கொள்கை 2020 தொழிற்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. தொழிற்கல்வியை பொதுக் கல்வியுடன் ஒருங்கிணைத்தல் மற்றும் தொழிற்கல்வியின் முக்கிய நீரோட்டம் ஆகியவை பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இது சம்பந்தமாக தேசிய கல்விக் கொள்கையின் பல்வேறு நோக்கங்களை நிறைவேற்ற, தற்போதுள்ள அனைவரையும் உள்ளடக்கிய கல்வித் திட்டம் புதுப்பிக்கப்பட்டு, தொழிற்கல்வி தொடர்பான பல்வேறு புதிய அம்சங்களான உள்நிலைப் பயிற்சி, புத்தகப் பை இல்லா நாட்கள், உயர் தொடக்க நிலையில் தொழிற்கல்விக்கான வெளிப்பாடு போன்றவை ஆதரிக்கப்படுகின்றன.
தொழிற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்களுக்கான ஆசிரியர் பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்வதற்கான முதன்மை ஒருங்கிணைப்பு நிறுவனமாக போபாலில் உள்ள பண்டிட் சுந்தர்லால் ஷர்மா மத்திய தொழிற்கல்வி நிறுவனம் செயல்படுகிறது.
தேசிய கல்விக் கொள்கை 2020 தொடர்பான அம்சங்கள், தொழிற்கல்வி கற்பித்தல், வேலைவாய்ப்பு திறன்கள், தொழில் மற்றும் முன்தொழில் திறன்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான வழக்கமான பயிற்சித் திட்டங்களை பண்டிட் சுந்தர்லால் ஷர்மா மத்திய தொழிற்கல்வி நிறுவனம் நடத்துகிறது.
சேவையில் உள்ள தொழிற்கல்வி ஆசிரியர்களின் திறன்களை தொடர்ந்து மேம்படுத்துவதற்காக பாடம் சார்ந்த பயிற்சி நிகழ்ச்சிகளும் இந்த நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனைவரையும் உள்ளடக்கிய கல்வித் திட்டத்தின் கீழ், தொழிற்கல்விக்கு இடமளிக்கும் வகையில் பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களுக்கு கருவிகள் மற்றும் உபகரணங்கள், கணினிகள் உள்ளிட்டவை வாங்குவதற்கு தொடர்ச்சியான மானியம் வழங்கப்படுகிறது.
அனைவரையும் உள்ளடக்கிய கல்வித் திட்டத்தின் கீழ், மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தின் திறன் இடைவெளி பகுப்பாய்வின்படி 22 துறைகளில் தேசிய திறன்கள் தகுதி கட்டமைப்புக்கு இணக்கமான 88 வேலை வாய்ப்புகளை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தேர்வு செய்யலாம்.
பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பானது, பள்ளிகள், மாவட்ட அளவில் கல்வி கற்கும் தொழில்கள், உள்நாட்டில் மிகவும் பொருத்தமான தொழில்கள் மற்றும் புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்களைக் கருத்தில் கொண்டு சரியான முறையில் கல்வி கற்பதற்குத் தேர்வு செய்யலாம்.
இத்தகவலை மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்..
****
(Release ID: 1983375)