தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

மிக்ஜாம் புயல் பாதிப்புகளை ஆய்வுசெய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார்

Posted On: 06 DEC 2023 8:09PM by PIB Chennai

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வுசெய்ய  பாதுகாப்பு  அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார். மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை  பராமரிப்பு மற்றும் பால்வலத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகனும் உடன் வருகிறார். இவர்கள் மழை வெள்ளம் மற்றும் புயலால் ஏற்பட்ட  சேதங்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வுசெய்வார்கள்.

மத்திய அமைச்சர்களுடன் தமிழ்நாடு நிதியமைச்சர் திரு தங்கம் தென்னரசும்  வெள்ள சேதங்களைப்  பார்வையிட்டு ஆய்வுசெய்வார்.

பின்னர், மத்திய அமைச்சர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைத் தலைமைச்செயலகத்தில் சந்தித்து மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் வெள்ளச் சேதங்கள் பற்றி கேட்டறிய உள்ளனர்.  

****

AD/DL



(Release ID: 1983331) Visitor Counter : 75


Read this release in: English , Urdu , Hindi