சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் நிதி நிலைமை; மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி தகவல்

Posted On: 06 DEC 2023 3:18PM by PIB Chennai

மத்திய அரசின் சார்பாக தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தவும், பராமரிக்கவும், நிர்வகிக்கவும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அதிகாரம் படைத்த அமைப்பாகும்.

நெடுஞ்சாலைகளின் மேம்பாட்டிற்கான நிதி, பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு உள் மற்றும் கூடுதல் பட்ஜெட் வளங்களின் கீழ் கடன் வாங்குவதற்கான ஒப்புதல் மூலம் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.

கூடுதலாக, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சொத்து பணமாக்குதல் மூலம் நிதியாதாரங்களைத் திரட்டுகிறது. மேலும், 2023-24 ம் நிதியாண்டிலிருந்து உள் மற்றும் கூடுதல் பட்ஜெட் வளங்களின் கீழ் கடன் வாங்குவது நிறுத்தப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டு வாரியாக வாங்கிய கடன் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.  இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தனது கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலகட்டத்துக்கான வரைபடத்தை கொண்டிருக்கிறது..

சுமார் 167 திட்டங்கள் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம், மரம் வெட்டுதல், பயன்பாட்டு மாற்றம், பருவமழை, உள்ளூர் கிளர்ச்சி, காடுகளை அகற்றுதல், கொவிட்-19 அதைத் தொடர்ந்து தொற்றுநோய் போன்ற பல்வேறு சிக்கல்களால் தாமதமாகின்றன.

மத்திய அரசின் சார்பாக தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தவும், பராமரிக்கவும் மற்றும் நிர்வகிக்கவும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய சட்டம் 1988 இன் கீழ் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது.

மத்திய அரசின் நிர்வாக நிறுவனமாக, இந்த ஆணையம் மத்திய அரசின் சார்பாக பயனர் கட்டணத்தை வசூலிக்கிறது மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அனைத்து ரசீதுகளும் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியில் டெபாசிட் செய்யப்படுகின்றன.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்  கடந்த 5 ஆண்டுகளில் பெற்ற கடன் விவரங்களின் அசல் தொகை விவரம் கீழே தரப்பட்டுள்ளன.

2018-19ம் நிதியாண்டு  ரூ.61,217 கோடி

2019-20ம் நிதியாண்டு ரூ.74,987 கோடி

2020-21ம் நிதியாண்டு  ரூ.65,080 கோடி

2021-22ம் நிதியாண்டு  ரூ.76,150 கோடி

2022-23ம் நிதியாண்டு  ரூ.798* கோடி

* இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது 2022-23ம் நிதியாண்டில் 54இசி பத்திரங்கள் மூலம் ரூ.798 கோடி மட்டுமே திரட்டியுள்ளது. மேலும் 2023-24ம் நிதியாண்டில்  உள் மற்றும் கூடுதல் பட்ஜெட் வளங்களின் கீழ் கடன்கள் இல்லை.

இந்தத் தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

****

(Release ID: 1983062)

ANU/SMB/BS/KRS


(Release ID: 1983242)
Read this release in: English , Urdu , Hindi , Telugu