பிரதமர் அலுவலகம்
மாலத்தீவு அதிபருடன் பிரதமர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
01 DEC 2023 9:35PM by PIB Chennai
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சர்வதேச பருவநிலை (சிஓபி-28) உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி 01 டிசம்பர் 2023 அன்று மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்சுவை சந்தித்தார்.
புதிதாக அதிபராக அண்மையில் பதவியேற்றுள்ள முயிஸூவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்த இருதரப்பு உறவுகள், மக்கள் தொடர்பு, வளர்ச்சி, பொருளாதார உறவுகள், பருவநிலை மாற்றம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். இரு தலைவர்களும் தங்கள் கூட்டு செயல்பாட்டை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர். இது தொடர்பாக, ஒரு குழுவை அமைக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
******
ANU/AD/PLM/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1982017)
வருகையாளர் எண்ணிக்கை : 123
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam