அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பாரதத்திற்கான உயிரித் தொலைநோக்குப் பார்வையை வரையறுக்க வேண்டிய நேரம் இது: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
02 DEC 2023 2:02PM by PIB Chennai
இந்தியாவுக்கான உயிரித் தொழில்நுட்பப் பார்வையை வரையறுக்க வேண்டிய நேரம் இது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு கவுன்சில் (பிரிக்) என்று அழைக்கப்படும் புதிய தன்னாட்சி அமைப்பின் மூதல் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த அமைப்பின் மூலம் உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை அதிகரிக்க முடியும் என்று தெரிவித்தார். இதன் மூலம் சுகாதாரம், உணவு மற்றும் எரிசக்தி தேவைகள் போன்றவற்றில் தற்சார்பு இந்தியா என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை விரைந்து நிறைவேற்ற முடியும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய உயிரி பொருளாதாரம் 13 மடங்கு அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார். உயிரித் தொழில்நுட்பத்தில் உலகளாவிய சூழல் அமைப்பில் முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா விரைவில் இடம்பெறும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறை (டிபிடி) நாட்டில் உயிரித் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு முகமையாக செயல்படுகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். பொருளாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியாவின் முன்னேற்றத்தை இந்த பிரிக் அமைப்பு மேம்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பிரிக் அமைப்பின் முதல் கூட்டத்தை முன்னிட்டு திரு ஜிதேந்திர சிங் அதன் வளாகத்தில் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறைத் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடியின் சுற்றுச் சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை இயக்கத்துடன் (மிஷன் லைஃப்) இணைந்தது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
*******
ANU/AD/PLM/DL
(Release ID: 1981878)
Visitor Counter : 123