பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கானாவின் அக்ராவில் நடைபெறும் ஐநா அமைதிப்படை நாடுகளின் அமைச்சர்கள் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு. அஜய் பட் கலந்து கொள்கிறார்

प्रविष्टि तिथि: 02 DEC 2023 10:24AM by PIB Chennai

பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு அஜய் பட், 2023 டிசம்பர் 05 முதல் 06-ம் தேதி வரை கானாவின் அக்ராவில் பயணம் மேற்கொள்கிறார். அவர் அங்கு நடைபெறும் ஐநா சபையின்  அமைதிகாக்கும் படையில் உள்ள நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். ஐநா-வின் அமைதி நடவடிக்கைப் பிரிவு மற்றும் கானா குடியரசு ஆகியவை இணைந்து இந்த கூட்டத்தை நடத்துகின்றன.

ஐநா அமைதிப்படையினர் எதிர்கொள்ளும் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு சவால்களை நிவர்த்தி செய்வதையும், உலகெங்கிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த படையினருக்கு ஆதரவை அதிகரிப்பதையும் இந்தக் கூட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐநா-வின் பல்வேறு அமைதி காக்கும் பணிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான படைகள் மற்றும் பொருட்களை அனுப்புவதில் இந்தியா எப்போதும் முன்னணியில் உள்ளது.

இந்தக் கூட்டத்தின்போது, பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பிற உறுப்பு நாடுகளின் அமைச்சர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார். இந்தப் பயணத்தின் போது அக்ராவில் உள்ள இந்திய சமூகத்தினருடனும் திரு அஜய் பட் கலந்துரையாடுகிறார்.

*******

ANU/AD/PLM/DL


(रिलीज़ आईडी: 1981859) आगंतुक पटल : 147
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी