குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

நிலம், வான், கடல்,விண்வெளி ஆகிய துறைகளில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது என்று குடியரசுத் துணைத்தலைவர் கூறினார்

प्रविष्टि तिथि: 30 NOV 2023 2:17PM by PIB Chennai

நிலம், வான், கடல், விண்வெளி ஆகிய துறைகளில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது என்று குடியரசுத் துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் இன்று கூறினார். கடந்த ஆண்டு ஐ.என்.எஸ்-விக்ராந்த் போர்க்கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலமும், பல உள்நாட்டு பாதுகாப்புத் தளவாட உபகரணங்களின் உற்பத்தியாலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தில்லியில் உள்ள இந்திய பொது நிர்வாக நிறுவனத்தில் நடைபெற்ற 49-வது பொது நிர்வாகத்தில் மேம்பட்ட தொழில்முறை என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், பலவீனமான ஐந்து நாடுகளில் ஒன்று என்ற நிலையிலிருந்து பெரிய 5 நாடுகள் என்ற நிலை வரை நாடு இதுவரை கடந்து வந்த பயணம் குறித்து குறிப்பிட்டார். இந்தியா தற்போது ஐந்தாவது பெரிய உலகப் பொருளாதார நாடாக திகழ்கிறது என்றும் , 2030-ம் ஆண்டில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் வளர்ச்சிக்கு 'முடிவெடுக்கும்' முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டிய திரு தன்கர், 'பாதுகாப்புப் படை வீரர்களைப் பாராட்டினார். இயற்கை பேரழிவுகளின் உதாரணத்தை மேற்கோள் காட்டிய குடியரசு துணைத்தலைவர், பாதுகாப்புப் படை வீரர்கள் மிக உயர்ந்த செயல்திறனை வெளிப்படுத்தியதற்காகவும், அவர்களின் திறன்மிக்க கடமை உணர்வை எடுத்துக்காட்டுவதாகவும் பாராட்டினார்.

***

ANU/AD/IR/RR/KPG


(रिलीज़ आईडी: 1981296) आगंतुक पटल : 125
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Odia