பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'கடல்சார் தலைவர்களிடையே இந்தியக் கடற்படையின் களப்பணி முயற்சி'

प्रविष्टि तिथि: 30 NOV 2023 11:30AM by PIB Chennai

மகாசாகர் என்பது பெருங்கடலைக் குறிக்கும் மற்றொரு சொல்லாகும். இருப்பினும் இந்தப் பிராந்தியத்தில் அனைவருக்குமான வளர்ச்சி மற்றும் தீவிரப் பாதுகாப்புக்கான கடல்சார் தலைவர்கள் இடையே உயர்நிலைக் காணொலிக் கலந்துரையாடலுக்கான இந்தியக் கடற்படையின் களப்பணி முன்முயற்சிக்கு மகாசாகர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

2023, நவம்பர் 29 அன்று இந்தியக் கடற்படையால் உயர்நிலைக் காணொலிக் காட்சிக் கலந்துரையாடலின்போது முதல் கட்ட மகாசாகர் நிகழ்வை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரிகுமார், பங்களாதேஷ், கமோரஸ், கென்யா, மடகாஸ்கர், மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொசாம்பிக், ஷெசல்ஸ், இலங்கை, தான்சானியா போன்ற இந்திப் பெருங்கடல் பகுதிகளின் கடற்படைகள் / கடல்சார் முகமைகள் மற்றும் உயர் தலைவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்கான கூட்டுக் கடல்சார் அணுகுமுறை' ஆகும். இது இந்தியப் பெருங்கடல் பகுதியில் திறன்களை ஒருங்கிணைப்பதற்கும், ஒத்துழைப்பதற்கும் தற்போதைய மற்றும் அவசியமான அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.

இக் கூட்டத்தில் பங்கேற்ற நாடுகளின் பிரதிநிதிகள், பொதுவான கடல்சார் சவால்கள், அவற்றைக் கூட்டு ஒத்துழைப்பு முறையில் எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து வெளிப்படையான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரிகுமார், 'பிராந்திய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக்' காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

***


ANU/SMB/IR/RR/KPG


(रिलीज़ आईडी: 1981060) आगंतुक पटल : 179
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi