நிதி அமைச்சகம்
நிதிச் சேவைகள் துறையில் சைபர் பாதுகாப்பு, இணையதள நிதி மோசடிகள் குறித்த கூட்டத்திற்கு நிதிச் சேவைகள் துறை செயலாளர் தலைமை தாங்கினார்
Posted On:
28 NOV 2023 8:25PM by PIB Chennai
நிதிச் சேவைகள் துறையில் சைபர் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சமீபத்திய இணையதள நிதி மோசடி சம்பவங்கள் குறித்து விவாதிக்க புதுதில்லியில் இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை செயலாளர் தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் தொலைத்தொடர்புத் துறை செயலாளர், நிதி சேவைகள் துறை பொருளாதார விவகாரங்கள் துறை, வருவாய்த் துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தொலைத்தொடர்புத் துறை, இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், இந்திய தனித்துவ அடையாள ஆணையம், இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம், இந்திய தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம், பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, ஏர்டெல் பேமெண்ட் வங்கி, ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, கூகிள் பே இந்தியா, பேடிஎம், ரேசர்பே ஆகியவற்றின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
டிஜிட்டல் கட்டண மோசடிகளின் சமீபத்திய புள்ளிவிவரங்கள், இந்த நிதி மோசடிகளின் பல்வேறு ஆதாரங்கள், மோசடி செய்பவர்கள் பின்பற்றும் வழிமுறைகள், நிதி சைபர் குற்றங்களை எதிர்கொள்வதற்கான சவால்கள் குறித்து உள்துறை அமைச்சகத்தின் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் விளக்கமளித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி செயல்படுத்தும் இடர் கண்காணிப்பு முன்உத்தி குறித்து சுருக்கமான விளக்கக்காட்சியை இவ்வங்கியின் பிரதிநிதிகள் வழங்கினர். தவிர, பேடிஎம், ரேசர்பே பிரதிநிதிகளும் தங்கள் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
நிதிச் சேவைகள் துறையில் சைபர் பாதுகாப்பிலிருந்து எழும் சவால்களைச் சமாளிப்பதில் வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களின் தயார்நிலை குறித்தும், டிஜிட்டல் கட்டண மோசடிகளின் அதிகரித்து வரும் போக்கு குறித்தும், இதுபோன்ற சைபர் தாக்குதல்கள் மற்றும் மோசடிகளைத் தவிர்ப்பதற்கான கவனம் செலுத்தும் அணுகுமுறை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
• டிஜிட்டல் உளவு தளங்கள் மூலம் சைபர் குற்றம் மற்றும் நிதி
• மோசடிகளில் ஈடுபட்ட 70 லட்சம் மொபைல் இணைப்புகள் இதுவரை துண்டிக்கப்பட்டுள்ளன.
• ரூ.900 கோடி சேமிக்கப்பட்டு, 3.5 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
• காவல்துறை, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கிடையே தடையற்ற ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதில் புதுப்பிக்கப்பட்ட கவனம் செலுத்தப்பட்டு, மோசடி செய்யப்பட்ட பணத்தை நிகழ்நேரத்தில் கண்காணித்தல் மற்றும் தடுத்தல்
• வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் முக்கிய கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து நிதி நிறுவனங்களையும் 'குடிமக்கள் நிதி சைபர் மோசடி அறிக்கை மற்றும் மேலாண்மை அமைப்பு' தளத்தில் கொண்டு வருதல், இதில் 259 நிதி இடைத்தரகர்கள் ஏற்கனவே உள்ளனர்.
• வங்கிகளின் கணக்குகளின் அச்சுறுத்தலை சமாளிக்க வியூகம்
• பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட ஆன்லைன் நிதி மோசடிகள் குறித்த எச்சரிக்கைகளைக் கையாள்வதில் வங்கிகள் பதிலளிக்கும் நேரத்தை மேம்படுத்த வேண்டும்
• சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து டிஜிட்டல் கடன் வழங்கும் செயலிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுதல்
• டிஜிட்டல் இந்தியா அறக்கட்டளை முகமை அமைத்தல் மற்றும் 'கட்டுப்பாடற்ற கடன் நடவடிக்கைகளை தடைசெய்தல் சட்டம்' என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வருவது உள்ளிட்ட டிஜிட்டல் கடன் வழங்கும் பணிக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கான நிலை
• வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களும் டிஜிட்டல் பேமெண்ட் பாதுகாப்பு குறித்து அதிக வாடிக்கையாளர் விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
***
ANU/SMB/IR/RR/KPG
(Release ID: 1980666)
Visitor Counter : 146