நிலக்கரி அமைச்சகம்
வணிக மற்றும் தனியார் சுரங்கங்களின் நிலக்கரி உற்பத்தியை நிலக்கரி அமைச்சகம் ஆய்வு செய்தது
Posted On:
28 NOV 2023 4:42PM by PIB Chennai
2023-24-ம் நிதியாண்டில் தனியார் மற்றும் வணிக ரீதியான நிலக்கரிச் சுரங்கங்களை நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரும், நியமன அதிகாரியுமான எம்.நாகராஜு தலைமையிலான குழு ஆய்வு செய்தது. இக் கூட்டத்தின் போது, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுதாரர்கள் 2023-24-ம் நிதியாண்டிற்கான தங்கள் உற்பத்தி இலக்கை அடையத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், செயல்பாட்டின் மேம்பட்ட கட்டங்களில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களை செயல்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் கூடுதல் செயலாளர் வலியுறுத்தினார்.
2023 ஏப்ரல் 1 முதல் நவம்பர் 20 வரையிலான காலகட்டத்தில் தனியார் / வணிக நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து மொத்த நிலக்கரி உற்பத்தி சுமார் 80 மெட்ரிக் டன் ஆகும், இது 2022-23-ம் நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 23% வளர்ச்சியைக் குறிக்கிறது. 2023-24-ம் ஆண்டில், இந்தச் சுரங்கங்களிலிருந்து 145 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது நாட்டின் நிலக்கரி இறக்குமதியைக் குறைக்கும்.
***
ANU/PKV/IR/AG/KPG
(Release ID: 1980443)
Visitor Counter : 97