சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊடகத் தகவல் (25/11/2023 மாலை 3 மணி நிலவரம்)


சில்க்யாரா சுரங்கப் பாதை விபத்து நிகழ்ந்த இடத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள்

प्रविष्टि तिथि: 25 NOV 2023 7:35PM by PIB Chennai

சில்க்யாரா சுரங்கப் பாதையில் சிக்கியுள்ளவர்களைக் காப்பாற்றுவதற்கு அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உத்தரகாஷியில் உள்ள சில்க்யாரா சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில் மீட்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  2 கிலோ மீட்டர் பகுதியில் கான்கிரீட் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மீட்பு முயற்சிகளின் மையமாக அது உள்ளது.

தொழிலாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு குறிப்பிட்ட பணியிலும் பல்வேறு அரசு அமைப்புகள் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றன. மீட்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்க தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர். சிக்கியவர்களின் மன உறுதியை அதிகரிக்க அரசு தொடர்ந்து தகவல்தொடர்புகளை பராமரிக்கிறது.

*****

ANU/PKV/PLM/DL


(रिलीज़ आईडी: 1979830) आगंतुक पटल : 131
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी