அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ஏ.என்.ஆர்.எஃப்), அறிவியல் ஆராய்ச்சியில் அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும்: அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் (எஸ்.இ.ஆர்.பி) செயலாளர் திரு அகிலேஷ் குப்தா

Posted On: 25 NOV 2023 5:52PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மூத்த ஆலோசகரும் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் (எஸ்.இ.ஆர்.பி.) செயலாளருமான டாக்டர் அகிலேஷ் குப்தா, புதுதில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று (24-11-2023) பங்கேற்றுப் பேசினார்.  அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ஏ.என்.ஆர்.எஃப்), நாட்டில் அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் எனவும் நடைமுறைகளில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் என்றும் அவர் கூறினார்.

இந்த அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை அறிவியல் ஆராய்ச்சியில் அரசு, கல்வியாளர்கள் மற்றும் தனியார் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். நாடு தற்போது அடிப்படை அறிவியல் கல்வியில் சிறந்து விளங்குகிறது என்று அவர் கூறினார். பெரும்பாலான இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் அடிப்படை அறிவியலில் கவனம் செலுத்துகின்றன என்று அவர் கூறினார். அரசு நிதியுடன் தனியார் துறை பங்களிப்புகளை மேம்படுத்துவதன் மூலம் ஆராய்ச்சிகளுக்கு ஆதரவளிப்பதை ஏ.என்.ஆர்.எஃப் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். எந்தவொரு இடையூறும் இல்லாமல் ஆராய்ச்சி நிதியைத் தொடர்வது, ஆழமான ஆராய்ச்சிக்கு கூடுதல் நிதியை ஒதுக்குவது மற்றும் பொது-தனியார் கூட்டுச் செயல்பாடு ஆகியவை அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ஏ.என்.ஆர்.எஃப்) மூன்று முக்கிய அம்சங்கள் என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் அறிவியல் சூழல் அமைப்பு தனித்து நிற்கிறது என்றும் ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எஸ்.இ.ஆர் போன்ற முன்னணி நிறுவனங்கள் உயர் தர ஆராய்ச்சித் தன்மை, மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் சிறந்த நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார். மாநில அளவிலான பல்கலைக்கழகங்கள் தங்கள் இளம் ஆராய்ச்சியாளர்களின் திறனை அதிக அளவில் கொண்டிருந்தாலும் அதை ஊக்குவித்து மேம்படுத்த வேண்டியுள்ளது என்றும் இதை. ஏ.என்.ஆர்.எஃப் மேற்கொள்ளும் என்றும் திரு அகிலேஷ் குப்தா தெரிவித்தார்.

*****

ANU/PKV/PLM/DL



(Release ID: 1979773) Visitor Counter : 59