பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

நகர்ப்புற எரிவாயு விநியோகத் துறையின், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (போக்குவரத்து) மற்றும் குழாய் மூலமான இயற்கை எரிவாயு (வீட்டு உபயோகம்) பிரிவுகளில் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுவைக் கட்டாயமாகக் கலப்பதை அரசு அறிவித்துள்ளது


2028-29 ஆம் ஆண்டிற்குள் முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் 750 அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு திட்டங்களை நிறுவுவதற்கும் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு கலப்பு அவசியம் - பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரி

மக்காச்சோளத்தில் இருந்து எத்தனால் உற்பத்தி பல்வேறு பல்துறை முயற்சிகள் மூலம் ஊக்குவிக்கப்படும்

Posted On: 25 NOV 2023 2:12PM by PIB Chennai

அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (சிபிஜி) கலப்பு கடமை என்பது  நாட்டில் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுவின்  உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்கும் என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு,  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை  அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி கூறினார். சிபிஜியின் பயன்பாடு மற்றும் ஏற்பை அதிகரிப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய பெட்ரோலிய அமைச்சர் தலைமையிலான தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்புக் குழு, நகர்ப்புற எரிவாயு விநியோகத் துறையின், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (போக்குவரத்து) மற்றும் குழாய் மூலமான இயற்கை எரிவாயு (வீட்டு உபயோகம்) பிரிவுகளில், அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுவைக் கட்டம் வாரியான கட்டாய கலவையை அறிமுகப்படுத்துவதாக நேற்று அறிவித்தது.

திரவ இயற்கை எரிவாயுவுக்கு இறக்குமதி மாற்று, அந்நியச் செலாவணியில் சேமிப்பு, சுழற்சிப்  பொருளாதாரத்தை ஊக்குவித்தல், நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைய உதவுதல் போன்றவை இதன்  முக்கிய நோக்கங்களாகும். இது சுமார் ரூ.37500 கோடி முதலீட்டை ஊக்குவிக்கும் மற்றும் 2028-29 க்குள் 750 சிபிஜி திட்டங்களை நிறுவ உதவும் என்று திரு பூரி கூறினார்.

*****

ANU/PKV/SMB/DL



(Release ID: 1979744) Visitor Counter : 104


Read this release in: English , Urdu , Marathi , Hindi