எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இரும்பு மற்றும் எஃகு துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய உலோகவியலாளர்களுக்கு தேசிய உலோகவியல் விருதுகள் வழங்கப்பட்டன

Posted On: 24 NOV 2023 2:10PM by PIB Chennai

தேசிய உலோகவியல் விருது (என்.எம்.ஏ)- 2022ஐ, 22.11.2023 அன்று புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய  எஃகு துறை இணையமைச்சர் திரு. ஃபகன் சிங் குலஸ்தே வழங்கினார். நான்கு பிரிவுகளில்  இந்த விருது  ஐந்து புகழ்பெற்ற உலோகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் உரையாற்றிய இணையமைச்சர் திரு. ஃபகன் சிங் குலஸ்தே, கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும், உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும், செலவுகளைக் குறைப்பதற்கும் இந்த உலோகவியலாளர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருப்பதாகக் கூறினார். இது தொழில்துறைக்கு உதவும் என்றும், எதிர்காலத்தில் எஃகு துறையில் பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்த வழிவகுக்கும் என்றும்  அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

2023 ஏப்ரல் - அக்டோபர் காலகட்டத்தில் இந்தியாவின் எஃகு உற்பத்தி மற்றும் பயன்பாடு முறையே 82 மில்லியன் டன் மற்றும் 75.8 மில்லியன் டன்னாக இருந்தது என அவர் கூறினார். எஃகு உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று அவர் கூறினார்.

விருது பெற்றவர்கள் மற்றும் பிரிவுகள் பின்வருமாறு:-

  1. டாக்டர் காமாட்சி முதலி உத்தண்டி - வாழ்நாள் சாதனையாளர் விருது
  2. டாக்டர் தேபாஷிஷ் பட்டாச்சார்யா - தேசிய உலோகவியலாளர் விருது
  3. டாக்டர் ராமேஷ்வர் சா - இரும்பு மற்றும் எஃகு துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
  4. டாக்டர் நிலோய் குண்டு - இளம் உலோகவியலாளர் (சுற்றுச்சூழல்) விருது
  5. அகிலன் முத்துமாணிக்கம் - விருது இளம் உலோகவியலாளர் (உலோக அறிவியல்) விருது

***

ANU/SMB/PLM/RS/KPG
 


(Release ID: 1979470) Visitor Counter : 115


Read this release in: English , Urdu , Hindi