தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner
0 6

கோவாவில் நடைபெறும் 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை குஷ்பூ சுந்தர் இடையேயான உரையாடல்

கோவாவின் கலா அகாடமியில் நடைபெற்று வரும் 54- வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை குஷ்பூ சுந்தர் ஆகியோர் தங்கள் சினிமா அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.

இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. 50-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். அவர் நடித்து சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது.

இந்த உரையாடலில், து நடிப்புத் திறன் குறித்து பேசிய விஜய் சேதுபதி, படத்தின் நடிகர்களை விட கதை மற்றும் கதாபாத்திரங்களால் பார்வையாளர்கள் ஈர்க்கப்படுகிறார்கள் என்று கூறினார். நடிப்பு பற்றி கேட்டபோது, ஒருமுக மனதுடன், நடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து குறிப்பிட்டார். "நடிப்புக்கு எந்த சூத்திரமும் இல்லை" என்று தெரிவித்த அவர், கதாபாத்திரத்துடன் ஒன்றிணைந்து தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

தேசிய விருது பெற்ற சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து பேசிய சேதுபதி, திருநங்கைகள் எதிர்கொள்ளும் நிஜ வாழ்க்கைப் போராட்டங்களை சித்தரிக்க முயற்சித்ததாக குறிப்பிட்டார்.

வில்லன் கதாபாத்திரங்களை தேர்வு செய்வது குறித்து சேதுபதியிடம் கேட்டபோது, குறிப்பிட்ட வேடங்களில் மட்டும் நடிப்பதைத் தவிர்க்க விரும்புவதாக தெரிவித்தார். திரைக்கதையின் அடிப்படையில் பல்வேறு கதாபாத்திரங்களை ஆராய்வதற்கான சுதந்திரம் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை விஜய் சேதுபதி  வலியுறுத்தினார்.

 

***

ANU/PKV/IR/RS/KRS

iffi reel

(Release ID: 1978899) Visitor Counter : 103